திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௨௬௯
யிருக்க வேண்டும் என்று வண்ணத்தால் திருத்திச் சென்றார், ஒருவர். இன்னொருவர் இதன் முகம் கொஞ்சம் சரியில்லை. அஃது இப்படியிருந்தால் நன்றாயிருக்கும் என்று முகத்தைச் சிறிது திருத்தினார். இன்னோர் ஒவியர் அதன் காதுகள் பொருத்தமாயில்லை; அவை இவ்வாறு இருக்க வேண்டும்; என்று கூறி அவற்றையும் திருத்திச் சரி செய்தார். இப்படியே, பலரும் பற்பல திருத்தங்களைக் கூறியும் சிலர், திருத்தியும் சென்றனர். இறுதியில் ஓர் ஒவியர் வந்தார்; அந்தக் குதிரை ஒவியத்தை நெடுநேரம் உற்றுற்றுப் பார்த்தார். கடைசியாக அவரும் கொஞ்சம் வண்ணத்தை எடுத்து அதன் கீழ் 'குதிரை என்றெழுதியிருப்பதை அடித்துவிட்டுக் கழுதை என்று எழுதி வைத்துவிட்டுச் சென்றார்.
இக்கதையுள் வரும் ஒவியர்களைப் போன்றவர்கள்தாம் அறிஞர் ஆனந்தனைப் போன்றவர்கள். திருத்தம் கூறலாம் திறனாய்வு செய்யலாம். ஆனால், மூலத்தை எவரும் திருத்தக் கூடாது. அஃது அறிவுப் பிழை. பண்புப் பிழை கலைப் பிழை நாகரிகப் பிழை. உலக அமைப்புகளெல்லாம் மாந்தக் கருத்துகளுக்கு உட்பட்டவையே. ஆனால், கருத்துகள் அத்தனையும் கருத்தளவாக நிற்க வேண்டும். கருத்துகளால் மூலங்கள் சிதைக்கப்படும் பொழுது அடுத்த காலக் கட்டத்தில், அக்கருத்துகளும் சிதைந்துவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. இதுதான் கருத்தியலுக்கும் பொருளியலுக்கும் உள்ள இயைபியல், ஒருவர் கருத்தின் மேல் இன்னொருவர் இன்னொரு கருத்தைச் சொல்லலாம். அதற்காக முன்னவர் கருத்தைச் சிதைப்பதற்குப் பின்னவர்க்கு எவ்வகை உரிமையும் இல்லை. அது பெருந்தவறு. இக் ‘கந்திலியார்’ வேலையை ஆனந்தன்கள் செய்யக்கூடாது; கூடவே கூடாது.
இனி, மரபியலைச் சிதைக்க வந்த ஆனந்தன் அவர்களின் கருத்துகளுக்குச் சில விளங்கங்களைக் கூறுவோம்.
“எது மரபு வழி? யாருக்கும் தெரியாது - என்கிறார் உரையாசிரியர் ஆனந்தன்,'அது மூட நம்பிக்கை அப்படியிருக்க திருக்குறளுக்கு ஏன் மரபு வழியில் மட்டுமே பொருள் கூற வேண்டும் என்றும் கேட்கிறார் ஆனந்தன்.
மரபு என்பது என்ன? -இதற்குத் தொல்காப்பியம் வரையறை செய்துள்ளது.
மாற்றருஞ் சிறப்பின் மரபியல் - தொல் 1500
‘மாற்றுதற்கரிய’ அருமை நிலைகளின் சிறப்புத் தன்மைதான் மரபியல், என்கிறது, தொல்காப்பியம். இத்தகைய மரபு நிலை உரைநூல் வழக்கில், வடிவில், திரிதல் நிலை ஏற்பட்டாலும் செய்யுள் நூல் வழக்கில் திரியக் கூடாது என்பார் தொல்காப்பியர். அதற்குக் காரணமும் கூறுவர். இக்கூற்-