பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௭௨

முன்னுரை


உரை பற்றி

1 இதுவரை வெளிவந்துள்ள உரைகள் ஏறத்தாழ இருநூறு இருக்கலாம். அவை இந்நூல் வெளியான தமிழ், இதன் அண்டையயலாகிய தமிழின மொழிகள், ஆங்கிலம், சப்பான், சீனம், செர்மன், உருசியம் முதலிய அயல் மொழிகள் ஆகியவற்றுள் எழுதப்பெற்றிருக்கின்றன.

2. நிறைவுரையில், இக்கால் உள்ள பொழிப்புரையுடன், தேவையான குறட்பாக்களுக்குச் சிறப்புரை, விரிவுரை, விளக்கவுரை, நுட்பவுரை, சொல்விளக்கம், விளக்கங்கள் மேலும் விரிவாக வரும்.

3. பொழிப்புரையில் அடைப்புக்குறிகளுள் கூறப்பெறுள்ளவை பொருளின் மேல் விளக்கத்திற்காகத் தரப் பெற்றுள்ளன. அவற்றை நீக்கிப் படித்தால் குறட்பாவின் நேர் பொழிப்புரை கிடைக்கும்.

4. இவ்வுரையைப் படிக்க முற்படுவார்க்கு ஒன்று கூற விரும்புகிறோம். அவர்கள் இதுவரை வெளிவந்த உரைகளுள், மிகச் சிறப்பான்து என்று கருதி மதிப்பிடும் உரையை அல்லது உரைகளை, எடுத்துத் தங்கள் முன்னர் வைத்துக் கொண்டு, அதை அல்லது அவற்றை வரிசையாகவும் மிக்க கவனமாகவும் ஒரு முறைக்குப் பல முறை படித்து விட்ட பின்னர், இதைப் படிக்க வேண்டுகிறோம். அப்பொழுதுதான், இவ்வுரையின் சிறப்பு, பொருத்தம் முதலியவற்றின் உண்மை இன்மை புலப்படும்.

அவ்வாறு புலப்பட்ட அவை பற்றி நமக்குத் தெரிவிப்பின் அக்கருத் துகளை மிகவும் மதித்துக் காப்புச் செய்து, இதன் நிறைவுரையில் அவற்றுக்குத் தக்க விடையும் விளக்கமும் கூறுதற்குப் பயன்படுத்திக் கொள்ள வியலும் என்க.

5. இக்கால் திருக்குறள் தொடர்பாகப் பரவியுள்ள பொய்யான, புரைசலான, மதவியல் சார்பான, ஆரியச் சார்பான, மயக்கத்திற்குரிய கருத்துகள் அனைத்துக்கும் ஒரு முடிவையும், தமிழர்களின் மெய்யியலுக்கு ஒரு விடிவையும் இவ்வுரை தரும் என்று உறுதியாய் நம்புகிறோம். ஆராய்ச்சியாளர்கள் இதில் கருத்துச் செலுத்துதல் வேண்டும்.

உரையாசிரியர்கள் இயல் பகுப்பு முறைகளிலும் வேறுபடுகின்றனர்.

ஆங்கில மொழி பெயர்ப்பாசிரியர்கள்:

1.எம்.எஸ். பூர்ணலிங்கம் (பிள்ளை), 2. வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர்)

3.எம்.ஆர். இராசகோபால ஐயங்கார்), 4. வ.வெ.சு. ஐயர்,