பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௭௫


7.நாணென்னும் நல்லாள் புறங் கொடுக்குங் கள்ளென்னும்

பேணாப் பெருங் குற்றத் தார்க்கு (924)

(பரி) பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி

8.பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் (972)

(பரி) வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருத்தி நின்று அதின் பயனனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கு மொத்தலிற் பிறப்பொக்கு மென்றும்... கூறினார்.

9. பண்புடைமை

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு (93)

வெறுத்தல் - பொருத்துதல்

(பரி) வடநூலார் அங்கமென்றமையின் உறுப்பென்றார்'

10. காமத்துப்பால்

(பரி) இது புணர்ச்சி பிரிவென இருவகைப்படும். ஏனை இருத்தல், இரங்கல், ஊடலென்பனவோ வெனின், இவர் பொருட்பாகு பாட்டினை அறம் பொருளின்பமென வடநூல் வழக்குப் பற்றி யோதுதலான் அவ்வாறே அவற்றைப் பிரிவின் கண் அடக்கினாரென்க.

இனி, அவைதம்மையே தமிழ் நூல்களோடும், பொருந்த புணர்ச்சியைக் களவென்றும், பிரிவைக் கற்பென்றும் பெரும்பான்மை பற்றி வகுத்து, அவற்றைச் சுவை மிகுதி பயப்ப உலக நடையோடு ஒப்பும் ஒவ்வாமையும் உடையவாக்கிக் கூறுகின்றார்.

திருக்குறளில் வீடு பேறு கூறப் பெறுவதாகக் கூறும் திருவள்ளுவ மான்லச் செய்யுள்கள்.

7, 8, 20, 22, 33, 38, 40, 50

'வேத சாரம்' - 42, 37

நான்மறைக் கருத்துகளோடு ஒப்பவைத்துப் பேசுபவை

4, 18, 23, 24, 28

திருவள்ளுவ மாலைச் செய்யுள்கள் - நூல் பல நூற்றாண்டுகட்கு முன்னரே இன்றுள்ள வடிவில் இருந்துள்ளது என்பதாகக் கூறப் பெறுகிறது. நேமி நாதவரை நூலுள் இத் திருவள்ளுவமாலைச்