பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௨௬

முன்னுரை


முன்மொழிந்து நின்றார். இலக்குவனார் - "இறை நலம்" என்றார். அப்பாத்துரையார் - இறை வாழ்த்து என்பது போலப் பட்டும் படாமற் குறித்துச் சென்றார் பாவாணர் பெருமகன் - "முதற்பகவன் வழுத்து" என்றார்

நம் பாவலரேறு ஐயா அவர்கள், சமயங் கடந்தவரும் .-மதமற்றவருமாகிய வள்ளுவர் பெருந்தகையின், கடவுள் என்னும் அக்கால் பரவுற்றிருந்த சொல்லாட்சியையே தம் அறவாக்கத்தில் காரணத்தோடு தவிர்த்துநின்ற உள்ளப் போக்கின் உண்மையுணர்வுகளை உட்கொண்டு நுண்ணிதினுணர்ந்து இறைக்கே வாழ்த்துக்கூறும் செயன்மிகை அல்லது எல்லையுணராத அடாப்போக்கு திருவள்ளுவர்க்கு அமையாத நோக்கென்று தெளிந்து - "கடவுள்" என்ற சொல்லையும் "வாழ்த்து" என்ற சொல்லையும் வேண்டுமென்றே அறத்தவிர்த்தவராய் - அறத்திற்கெல்லாம் மூல முதலாகிய ஆற்றல்கூறை உணர்தற்கென்றே உணர்த்தியதிது என உணர்ந்து புத்தம்புதிய தலைப்பாக "அறமுதல் உணர்தல்" என்னும் அழகிய - நேரிய அருந்தொடர்ச்சொல் வழி ஆங்குப் பதித்துள்ள துணிவு போக்குணர்ந்த நோக்குவீறு காட்டும் கட்டியமாகவே முன்னிற்கின்றது!

பொருள்கொள்ளும் முறைமைக்கேற்ப, திருக்குறளின் யாப்பமைப்பை நேரிய உரைப்பு முறையில் (பிறிதொரு சொல் யாதும் கொண்டு கூட்டாது) உரியவற்றையே நிரல்படநிறுத்தி - கடிய சொற்புணர்ச்சியிடங்களில் பகுப்புரு காட்டி அரிய தோற்றத்தில் அமைத்திருக்கும் அழகு மிகு நனி சிறப்புடையது! [காண்க: குறள்: 771] என்பு இலதனை வெயில் போல - அன்பு இலதனை அறம் காயுமே. இப் பொருள்கோள்முறையை மூலச் செய்யுளுக்கு அடுத்தும், பொழிப்புரைக்கு முன்னுமாக இடையில் வைத்துவிட்டுப் பொருள் கூறப்புகும் முறை, - உண்மைப் பொருளைத் தெரிந்துகொள்வார்க்குச் சிந்தனையோட்டத்திற்குரிய தெளிவு வாய்கால் ஒன்றை உருவாக்கி நிறுத்தும் அரிய அறிவுமுறையே ஆகும்.

“அறமுதல் உணர்தல்” என்னும் முதற்பாயிரத்துள் பயிலப் பெற்றுள்ள சில சொற்களுக்கு உரையாசிரியர்கள் இது வரையிலாகப் பொருள்கொண்ட வகை, அவர் தாம் கொண்டேற்றிருந்த மதச் சார்புக்கருத்துத் தோய்வாலும் - இறைவழிபாட்டு நடைமுறைப் பயில்வொன்றன் காட்சியை மட்டுமே உட்கொண்டதாலும் உரைத்து நின்ற பாங்குடையதாகும். அறநூலாசிரியர்பெருந்தகையாகிய திருவள்ளுவர் உள்ளத்தின் சமயஞ்சாரா மாட்சிமையை நன்கு