பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவா : பக்கத்தில் ஊன்றும் விழுதுபோல் முட்டுக் கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியாகிய ஆலமரம் துன்பமாகிய சிதல் (கறையான்) தன் அடியை அரித்துத் தின்றுவிட ஒரு தாங்கலுமின்றி விழுந்து விடும்.

நைந்தடி யற்ற வாலம் நடுங்கிவீழ் கின்ற தென்று வந்தவீ மூன்றி விழா வகைநிலை விளைக்குமபோல் மைந்தர்கள் தமக்குள் நல்ல அறிவினால் மகிழ்ந்து சேர்ந்த தந்தையைத் தளரா வண்ணம் தாங்குவர் தவத்தினென் - ஒட்டக் கூத்தர்-உத்திரகாண்டம்

6. நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது 235 அறம்-புகழ் இல்லறவியல் பரி : புகழுடம்பு செல்வமெய்தப் பூதவுடம்பு நல்கூர்தல் 'உளதாகும் சாக்காடு' ஆவது புகழுடம்பு நிற்கப் பூதவுடம்பு இறத்தல்

பரிமேலழகர் வழுவிய வகைகள் 1. ஆரிய வழிகாட்டல், 2. பொருளிலக்கணத் திரிப்பு 3. ஆரிய வழிப் பொருள் கூறல் 4. ஆரியக் கருத்தைப் புகுத்ததல் 5. தென் சொல்லை வடசொல் மொழிபெயர்ப் பெனல் 6.தென் சொற்கு வடமொழிப் பொருள் கூறல் 7.சொற்பகுப்புத் தவறு. 8. சொல் வரலாற்றுத் தவறு. 9.சொற்பொருள் தவறு. 10.அதிகாரப் பெயர் மாற்று 11. சுட்டு மரபறியாமை 12.இரு குறளைச் செயற்கையாக இணைத்தல்.

2. பரிமேலழகர் தொடர்பால் திருக்குறள் அழியாமை. தொல்காப்பி யரால் தொல்காப்பியம் அழியாமை போல்,

  • கழாக்கால் . பொருள் புல்லறிவாண்மை 840

பரி : தூயவல்ல மிதித்த காலை இன்பந் தரும் அமளிக் கண்ணே வைத்தாற் போலும். அதனால் அவ்வமளியும் இழிக்கப் படுமாறு போல இவனால் அவ்வவையும் இழிக்கப் படுமென்பதாம்

பாவா : பள்ளி-கோயில்