பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
  • மாந்தர் சிந்தனைக் கெட்டிய எல்லாக் கருத்துகளும் இதில் கூறப் பெற்றுள்ளன. இதில் இல்லாத மாந்தன் தெரிந்து கொள்ளத் தக்க வேறு பொருள் உலகில் இல்லை.
  • ஊற்று மணலைத் தோண்டத் தோண்ட நீர் ஊறி வரும்; குழவி வாய் வைத்துக் குடிக்கக் குடிக்கத் தாய்ப்பால் சுரக்கும்; அவையொப்ப, மதிநுட்பம் செறிந்த அறிஞர்கள் ஆராய ஆராய இதில் அறிவு பெருகித் தோன்றும்.

9. திருவள்ளுவர்ப் பற்றி வழங்கும்

வரலாற்றுச் செய்திகள்

  • திருவள்ளுவர் பிறப்பு பற்றிய பல கருத்துகள்
  • ஆதி.பகவன்
  • ஒளவையார் - திருவள்ளுவர் உடன்பிறந்தாள் என்ற கதை.
  • திருவள்ளுவர் நெசவுத் தொழில் - அரசுக் கட்டளை அறிவிப்பாளர்
  • திருவள்ளுவர் மனைவி வாசுகி கதை.
  • இவர்கள் இருவரையும் பற்றிய நிறைய கதைகள். நிகழ்ச்சி
  • இவர் ஒரு குறு நில மன்னவர்.
  • சென்னை, மயிலார்ப்பூரில் ஒரு கோயில் உள்ளதால் அவர் பிறந்த ஊர் மதுரை என்று ஒரு திருவள்ளுவமாலைச் செய்யுள் ஒன்று கூறுகிறது. (பாட்டு 21)
  • இன்றைய நிலையில் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதி அல்லது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் என்பதே திருக்குறள் நூலின் காலக்குறி.

-ஆனந்தன் முகப்புரை திருக்குறளின் உண்மைப் பொருள்.

10. திருக்குறள் கற்றலும், நிற்றலும்

11. முடிவுரை