பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

௩௧



வள்ளுவர்கால வரலாற்றையும் - அக் காலச் சூழலையும் அது யாக்கப்பெற்றதற்கும் ஆக்கப்பெற்றதற்குமான நோக்கத்தையும் . அதனுள் பதிவுசெய்யப்பெற்றுள்ள சொற்களுக்குரிய அற்றைக் காலப் பொருள்வழக்குகளையும் நுண்ணிதாகக் கூர்ந்தறியுந் திறஞ்சான்ற சான்றோரே, அதற்கேயுரியதாக உள்ளடக்கி நிற்கும் நுண்பொருள்களைத் துலக்கியும் இலக்கியுங் காட்டும் விளக்கத்தையும் வெளிக்கொணரவியலும்! மற்றவர் முயற்சிகள் யாவும், குன்று முட்டிய குருவிகளின் முயற்சிகளும் - விளைவுகளுமே! அம் முயற்சிகளை உள்ளேற்கும் பயினன் (பயிலுநன்) உள்ளப்பையும் குன்று முட்டிய குருவிப்பாடு பெற்றுக் குடைச்சலுற்றுக் குலைவே கொள்ளும்!

கூறப் பெற்ற கருத்தொன்று - பிழைபாடுடையது என்னினும் கூறப் பெற்றவாறே கூறப்பெறவேண்டுமேயன்றிப், "பயன் விளைக்க வேண்டும் என்றே நல்லுள்ளங் கொண்டேம்!" என்றவாறு சுற்றி வளைத்து அதற்குச் சுவரெழுப்பிக் காப்பதோ இட்டுக் கட்டி அங்கு ஏற்றமிறைத்து நிற்பதோ - இன்று வரையிலாக ஒரு சொல் பெற்று வந்துள்ள வளர்ச்சிகளையும் விரிவாக்கங்களையும் பயன்படுத்திக் கொண்டு பாடுகாட்டும் நோக்கத்திற்கெனக் கூடுவிட்டுக் கூடுபாய்வன்ன மாய்மாலங் காட்டுதலோ - கூடவே கூடா! ஏனெனில், உரையானது மூலத்தின் உள்ளிருப்பதை வெளிக்கொணரும் உரமுடையதாக இருக்கவேண்டுமேயல்லாது - உரையாசிரியரின் உரவறிவைப் பதிவுசெய்வதற்கென்றமைந்த காட்சித் திரையாக அதனை மாற்றிவிடக்கூடாது! (அது) கூறியதைக் கூறவேண்டுமேயன்றி - வீறு கொளுத்தவென்றெண்ணி அதுவே மாறுகொளக் கூறலாகாது! அந் நிலை, தாறுமாறு நேரற்கு இடந்தருமே யன்றித் - தேறுமாறு காட்டத் தினையளவும் பயன்படாது! கூறுமாற்றில், ஏறுமாறு கூடாது!

திருக்குறளுக்குரிய உரையை "மெய்ப்பொருளுரை” என்றவாறு பெயர்வைத்து உரைத்துள்ள பாங்கிடையில், ஒர் அரிய உண்மையும் உள்ளடங்கியுள்ளது!

“ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் வாழ்வாங்கு வாழ்ந்த அவ் வள்ளுவப்பெருமகனாரின் மெய்ம்மவியல் நோக்கங்களை உட்பதிவுகள் கொண்டுள்ள பெரும்பாலான இடங்களினின்று அன்று அவருள்ளத்துட் கருதித் தேர்ந்த தனிச்சிறப்புடைய மெய்ம்மக் கருத்துகளையும் . அவர் காலத்து நின்று நிலைபெற்றிருந்தவற்றினின்று அவர் ஒப்பியேற்றுப் பதித்துள்ள அரிய மெய்ம்மக் கருத்துகளையும் ஒரு சேர வெளிக் கொணருவதற்கென்றமைந்த "மெய்ப்பொருளுரை” இதுவே, என்பது ஒன்று! "நூற்றுக்கும் மேற்பட்டனவாகி அச்சேறி அச்சுறுத்திநிற்கும்