பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௩௨

முன்னுரை


பெரும் பல்லுரைகள் இதுகாறும் வெளிப்படுத்தியார்த்துள்ள பொருட்கூறுகளின் பொக்காந் தன்மைகளைச் சுட்டியும் அவற்றின் புரை குறைகளைப் புலவாள் கொண்டு காரண கருமியப் பட்டியலிட்டு வெட்டியும் - வள்ளுவர் பெருமகனாரின் உள்ளத்தே வயப்பட்டு நின்று வெளிப்பட்டொளிறும் குறட்பாக்களுக்குரிய தெள்ளுரை என்பது, அதற்கேயுரிய உண்மையுரையாகிய மெய்ப் பொருட்பாட்டுரையாகிய) "மெய்ப்பொருளுரை” ஆகிய இதுவே, என்பது மற்றொன்று!"

அஃதாவது, மெய்ம்மந் தொடர்பான பொருட்கூறுகளை நுண்ணிதின் காட்டும் உரை, என்னும் பொருட்பாடு பெறுமாறும் - வள்ளுவர் கருதிய மெய்யான பொருள்களைக் கூறும் உரை என்னும் பொருட்பாடு பெறுமாறும் ஒரு சேரச் சுட்டவல்ல நுட்பப் பெயராகவே - மெய்ப் பொருளுரை” என்றவாறு இங்குக் குறிக்கப் பெற்றதாயிற்று!)

"பெய்யெனப் பெய்யும் மழை" - என்பதற்கு, "அத்தகையவள்." பெய் எனக் கூறின் மழை பெய்யும்! " - என்றவாறு முன்னைய மரபுப் பொருட்சாறத்தை உள்வாங்கி ஏற்றுக் கொண்டு பிறழாது பொருள் வரைந்துள்ள நம் பாவலரேறு-ஐயா அவர்கள் - அத்துடன் நில்லாராய் - அதற்குரிய விளக்கப்பகுதியில் தம்மின் தனிப்பட்ட கருத்துரையையும் வெளிப்படையாக முன்வைத்திருக்கும் செப்பச் செழும்போக்கு மிகவுங் கருதி மகிழுதற்குரியது!. .

"பெய் என்று யார் சொன்னாலும் மழை பெய்யாது! அஃது இயற்கையன்று! இறும்பூது ; கற்பனை ! . . . . . . பழந்தமிழகத்தில் கற்புள்ள பெண்டிர் என்றால், அவள் கணவனைத் தெய்வமாக மதித்துத் தொழல் வேண்டும். அத்தகைய கற்புள்ளவள் "பெய்" என்றால் மழை பெய்யும்! - என்னும் நம்பிக்கை இருந்துளது என்பதே இக் குறளடக்கிய பிற கூற்றுகளிலிருந்தும் தெரிய வருகிற செய்தி!

- இது மிகைப்படுத்தப் பெற்ற ஒரு தெய்வ நம்பிக்கையே தவிர, இயற்கைக்குப் பொருந்தியதாகக் கூற முடியாது. இஃதும், ஒரு வகையில் மூட நம்பிக்கையே!

இம் மூட நம்பிக்கை நூலாசிரியர்க்கும் இருந்துள்ளது என்பதையே இக் குறள் காட்டும்! அதற்காக அவரை அதனின்று மீட்கும் பொருட்டு, இத் தொடர்க்குப், "பெய்யெனப் பெய்யும் மழை போன்றவள்!" என்றெல்லாம் பொருளுரைப்பது தேவையில்லை என்றறிக!” (காண்க விளக்கப் பகுதி : குறள் : 55)

இச் சிறிய விளக்கக்குறிப்புள் அடங்கிநிற்கும் செய்திகளாவன: 1.