இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௩
திருக்குறள் மெய்ப்பொருளுரை
உரைச் சுருக்கம்
அறம்முப்பத் தெட்டு பொருளெழுப தின்ப
உறவிருபத் தைந்தென் றுரை.
பாயிரம் நான்காம் பயனறம்முப் பன்னான்காம்
ஆயும் பொருளெழுப தாகுமே -- தோயுமுண்மைக்
காதல் மனைவியொடு நுண்காமம் ஐயைந்தாம்
ஒதும் திருக்குறள்என் றோது.