பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

ருக


நூற்றுக்கணக்கான ஊர்கள், இடங்கள்.

- அவ்வகையான நூல்களின் பெயர்கள் சில:

திருக்கோவையார், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, திருமந்திரம், திருவிளையாடல் புராணம், திருவந்தாதி, திருத்தொண்டர் திருஅந்தாதி, திருத்தொண்டத் தொகை, திருமுருகாற்றுப்படை, திருமொழி, திருவாய்மொழி, திருவாய்மொழி நூற்றந்தாதி, திருவிசைப்பா, திருவிருத்தம், திருவுந்தியார், திருவெங்கைக் கோவை, திருவேகாதசமாலை - முதலியவை. இவையனைத்தும் சமயம் சார்ந்த நூல்களே!

இவ்வகையில், எந்தச் சமயமும் சாராத, அறவியல் சார்ந்த, நூலாக இருப்பது தமிழிலக்கியப் பரப்பிலேயே திருக்குறள் ஒன்றே.

இனி, உலகப் பேரறிஞர்கள், இலக்கிய மதிப்பீட்டாளர்கள், மக்கள் நலம் கருதிய மாமாந்தர்கள், உலக உய்வுக்கு வழிகாட்டிய மாமேதைகள், சீர்திருத்தக்காரர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பொருளியல் சார்ந்த பொதுமைக் கருத்தாளர்கள், பெரும்புலமைத் திறமிக்கவர்கள், தமிழியல் ஆய்ந்த சான்றாளர்கள், பிறமொழி இலக்கிய வல்லுநர்கள், உலக இலக்கியம் ஆய்ந்த உரவோர்கள், சமயங்கள் சார்ந்த நல்லுணர்வாளர்கள், சமயஞ் சாராத பொதுவுணர்வாளர்கள், பகுத்தறிவாளர்கள் முதலிய அனைத்துத் துறை அறிஞர் பெருமக்களும் ஒருமுகமாகப் பாராட்டிப் பேசும் உலக உயர்வாக்க நூல்களில் முந்து நூலாக வந்து நிற்பது திருக்குறள் ஒன்றே என்க.

அவர்களின் புகழ் மாலைகள் சிலவற்றை இங்கு நினைவுகூர்தல் திருவள்ளுவப் பேராசானுக்கு வழுத்துக் கூறுவதாகும்.

"பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ”

- பெருந்தொகை 1544

"தெய்வப் புலமைத் திரு வள்ளுவா்குறளில்
உய்விக்கும் நுாலெல்லாம் உள்ளது"

- பெருந்தொகை 1546

"சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவர்"

- கல்லாடம்.

“பல்காற் பழகினும் தெரியா வுளவேல்
தொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவையார்
மூன்றினும் முழங்கும்"