திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௫௫
For thou art bard ofuniversal man
And still thy 'Book above the Waters wan
Virtue, true, wealthy and joy, and beings
In sweetest mystic couplets doth proclaim
Where winds sea - wafled palmy forests fer
Hoply undreaned of 'visions' glad thine eyes
In realms beyond thy fabled 'seven foldbirth'
And cloud of darkness from the spirit roll;
Which lands far - off have heard with strange surprise
Faint echoes of thy song. Through all the earth
Men hail thee brother, seer of spotless soul."
G.U. Pope, (Sacred Kural.P.2.)
"The Kural is composed in the purest Tamil. In about 12,000 Words which the poet has employed to convey his thoughts here are scarcely fifty of Sanscrit origin"
— Rev. Dr. J. Lazaras.
குறளாசிரியர், இந்துக்களுக்குரிய மூட நம்பிக்கைகளினின்றும் தாம் விடுபட்டு நிற்பதை நூல் முழுவதிலும் நன்கு விளக்கியுள்ளார். அவர் இறையைப் பற்றிக் கூறும் திறத்தை நாம் வியந்து போற்றாமலிருக்க முடியாது”
- அறிஞர் இரெவரண்டு எலிசாகூல் -
நூல்களில் தலைசிறந்த திருக்குறள் உண்மையான தனிச்சிறப்புடன் அமைந்து விளங்குவதால் நம் கருத்தைக் கவரும் வன்மை யுடையதாயிருக்கின்றது. ஒரு வகுப்பினர்க்கு மட்டும் உரிய கொள்கைகளை மதியாது ஒதுக்கி, மக்கள் அனைவர்க்கும் ஒருங்கே பொருந்தும் உண்மைகளை மட்டுமே ஆசிரியர் நூலில் கூறியுள்ளார். இதனால், மனு நூலிலும் மற்ற சாத்திரங்களிலும் கூறும் பொருளற்ற மூடப் பழக்க வழக்கங்கள் நீக்கப்பட்டு. நூல் மேம்பாட்டுடன் விளங்குகிறது.
- அறிஞர் இரெவரண்டு டபுள்யு. எச். ட்ரு -
“சமயப்போலி, சமயக் கொடுமை, பொய்யொழுக்கம் ஆகியவை நூல் முழுவதிலும் கண்டிக்கப்பட்டுள்ளன.”
- இரெவரண்டு ஈ.செ. இராபின்சன் -
"இதற்குச் சமமாகிய நூல், மக்களாய்ப் பிறந்தோர் பேசும் வேறு எம் மொழியிலும் காண முடியாது.”
- இரெவரண்டு பர்சிவெல் -