௫௬
முன்னுரை
"திருக்குறள் ஒரு கல்விக் களஞ்சியம்; புலவர் பெருந்துணை ஒப்புயர்வற்ற சொற்றிறம் நிறைந்த ஒழுக்க நூல் தமிழர்களின் மனப்பண்பு உயர் ஒழுக்கத்தையே நாடி நின்றது எனபது இந்நூலால் தெளிவாக விளங்குகின்றது."
- சார்லசு ஈ. கவர் -
"திருக்குறள் பயக்கும் இன்பம் எத்தகையதென்று எம் மொழிபெயர்ப்பாலும் எடுத்துக்காட்ட இயலாது."
- முனைவர் கிரெளல் -
"தமிழிலக்கியத்தின் தலையணியாகிய திருக்குறளை ஒதியுணர்ந்தாலல்லது, தமிழ் அறிந்தவர் என்று எவராலும் கூறிக் கொள்ள முடியாது.”
- பிரடெரிக் பின்காட் -
"திருக்குறள் உலக இலக்கியங்களில் பொறுக்கி எடுத்த மணியாகும். சாதி, வகுப்பு, மதம் என்ற எல்லாப் பிரிவினைகளையும் ஆசிரியர் கடந்தவர். அவர் கூறுவது மக்கட் குழுவுக்கே பொதுவான அறநெறியும் அறிவுரையுமாகும்."
-
எம். வின்டெர் நிட்ச் -
"குறளின் தூய்மைக்கு மற்றெந்த தமிழ்நூலும் அதனருகிலும் இருக்கத் தகுதியுடையதன்று...தமிழ் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடுவொர்க்குத் திருக்குறள் தனிப்பட்ட பேருதவி புரிவதாகும்"
- முனைவர். செ. இலாசரசு -
(அறிஞர் இரெவரண்டு எலிஜா ஹலில் முதல் ஜெ இலாசரஸ் வரையுள்ள கருத்துரைகள் யாவும், உறையூர் இறையனார் அவர்களின் திருக்குறள் ஆராய்ச்சி எனும் நூலிலிருந்து எடுத்துக் கொடுக்கப் பெற்றவையாகும்)
"Indeed, it is generally acknowledged, that there is notreatise equal to the Kural in any Indian language"
- John Murdock -
(Catalogue of Tamil Books)