பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார்

௬ரு“நிரம்பிய நூலின்றிக் கோட்டிகொளல்”

– 401.

“கல்லாதான் சொல் காமுறுதல்”

– 402.

“கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்”

– 404.

“கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்”

– 405.

“நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று”

– 407.

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ(டு) ஏனை யவர்”

– 410.

“செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்”

– 411.

“செவிக்கு உணவு”

– 412.

“ஒழுக்க முடையார் வாய்ச் சொல்”

– 415.

“பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்”

– 417.

“கேள்வியால் தோட்கப் படாத செவி”

– 418.

“நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது”

– 419.

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்"

– 420.

“அறிவுஅற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண்”

– 421.

“தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு”

– 422.

“மெய்ப்பொருள் காண்பது அறிவு”

– 423.

“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு”

– 424.

“மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு”

– 425.

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு”

– 426.

“அறிவுடையார் ஆவது அறிவார்”

– 427.

“அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்”

– 428.

“எதிரதாக் காக்கும் அறிவு”

– 429.