பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௬௮

முன்னுரை


(131); உரவோர் (136); பல கற்றவர் (140); அறம் பொருள் கண்டார் (141); தெளிந்தார் (143); பகை, பாவம், அச்சம், பழி இகவாதவர் (146); பேராண்மை உடையவர் (148); நிறையுடையவர் (154); துறந்தாரின் துய்மையர் (159); அழுக்காறு இலாதவர் (161); செவ்வியர் (169); பழிப்படுவ செய்யார் (172); அறனல்ல செய்யார் (173); வெஃகுதல் செய்யார் (174); அஃகி அகன்ற அறிவுடையார் (175); ஆற்றின் கண் நின்றார் (176); வேண்டாமை என்னும் செருக்கர் (180); அறஞ்சொல்லும் நெஞ்சத்தார் (185); நீர்மையுடையார் (195); அரும்பயன் ஆயும் அறிவினார் (198, மருள் தீர்ந்த மாசறு காட்சியர் (199); விழுமியார் (210); கைம்மாறு வேண்டாக் கடமையர் (211); ஒத்ததறிவார் (214); பேரறிவாளர் (215); நயனுடையார் (216); பெருந்தகை (217); கடனறி காட்சியர் (218); ஈத்துவக்கும் இன்பினார் (228); புகழுடையார் (233); புலவர் (234); வித்தகர் (235); இசையென்னும் எச்சம் பெற்றார் (238); அருட்செல்வர் (241); அருள் சேர்ந்த நெஞ்சினார் (243); அருளாள்வார் (244); மெய்ப்பொருள் கண்டார் (249); செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் (258); புலால் மறுத்தார் (260); தவத்தர் (261); அளவென்னும் ஆற்றல் புரிந்தார் (287); அளவறிந்தார் (288); வாய்மையர் (298); அகந்துாயர் (298);

நூலோர் (323); ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் (353); மெய்ப்பொருளறிஞர் (355); பேரா இயற்கையர் (370); நுண்ணிய நூல் பல கற்றவர் (373); உண்மையறிவர் (373), தெள்ளியர் (374); காட்சிக் கெளியர் (386); கசடறக் கற்றார் (391); கற்றறிந்தார் (399); நிரம்பிய நூல் கற்றவர் (401); நுண்மாண் நுழை புலம் மிக்கார் (407); இலங்கு நூல் கற்றார் (410); செவிச்செல்வர் (411); ஆன்றோர் (412); இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வியர் (417); நுணங்கிய கேள்வியர் (419); நுண்பொருள் கண்டார் (424); ஆவதறிவார் (427); அறனறிந்து மூத்த அறிவினார் (441); நல்லார் (450); தேர்ந்தெண்ணிச் செய்வார் (462); எள்ளாத எண்ணிச் செய்தார் (470); அருவினை செய்தார் (483); ஊக்கமுடையார் (486); மொய்ம்பர் (492); குடிப்பிறந்தார் (502); அரிய கற்று ஆசற்றார் (503); அறிந்தாற்றிச் செய்தவர் (515); புகழ்ந்தவை போற்றிச் செய்தவர் (538); உள்ளியது எய்தியவர் (540); கருமம் சிதையாமல் கண்ணோடியவர் (578); நாகரிகர் (580); ஊக்கம் ஒருவந்தம் கைத்துடையார் (593); உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளியவர் (596); சிதைவிடத்து ஒல்கா உரவோர் (597), மடிமடிந்து மாண்ட உஞற்றிலவர் (607); முயற்சிப்பெருமையர் (611); அசாவாமை உடையவர் (611); தாளாண்மை என்னும் தகைமைக் கண் தங்கியவர் (614); இன்பம் விழையாது வினை விழைந்தவர் (615); துன்பம் துடைத்தததுான்றிய தூண் (615); முயற்சி திருவினை ஆக்கியவர் (616); மடியிலாத் தாளாளர் (617); அறிவறிந்து ஆள்வினை செய்தவர் (618); ஊழையும் உப்பக்கம் கண்டவர் (630); உலைவின்றித் தாழாது உஞற்றியவர் (630); இடும்பைக்கு இடும்பை படுத்தவர் (623);