பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார்

௬௯





மடுத்தவாய் எல்லாம் பகடன்னார் (624); பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றியவர் (626); இன்பத்துள் இன்பம் விழையாதவர் (629); இன்னாமை இன்பம் எனக் கொண்டவர் (630); கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டவர் (631), தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் மாண்டவர் (634); செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்தவர் (637): முறைப்படச் சூழ்ந்து முடிவுறவே செய்யும் திறப்பாடு உடையவர் (640); நாநலம் உடையவர் (641); ஆக்கமும் கேடும் அதனால் வருதலால், சொல்லின் கண் சோர்வு காத்து ஓம்பியவர் (642); கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல்வன்மை உடையவர் (643); அறனும் பொருளும் திறனறிந்து சொன்னவர் (644); பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து சொற்களைச் சொன்னவர் (645); வேட்பத் தாம் சொல்லிப் பிறர் சொல் பயன் கொள்ளும் மாட்சியுடைய மாசற்றவர் (645); சொலல் வல்லர், சோர்விலர், அஞ்சார்; அதனால் இகல் வெல்லல் யாரும் இலாதவர் (647); ஞாலம் விரைந்து தொழில் கேட்கச் செய்தவர் (648); நிரந்து இனிது சொல்லுதல் வல்லார் (648); பல சொல்லக் காமுறாது சில சொல்லால் தேற்றியவர் (649); கற்றது உணரவிரித்து உரைத்தவர் (650); ஆக்கம் தரும் துணை நலம் கொண்டு, எல்லாம் தரும் வினைநலம் விரும்பியவர் (651); புகழொடு நன்மை பயவாத வினையை என்றும் ஒருவியவர் (652); ஆதும் என்னும் எண்ணவுறுதி கொண்டவர்; ஒளி மாழ்கும் செய்வினை தவிர்த்தவர் (653), இடுக்கண் படினும் இளிவந்த செய்யதாத நடுக்கற்ற காட்சியவர் (654); எற்றென்று இரங்குவ செய்யாதவர்; செய்யினும் மற்றன்ன செய்யாதவர் (655); ஈன்றாள் பசி காண்பாராயினும் சான்றோர் பழிக்கும் வினை செய்யாதவர் (656); பழிமலைந்து எய்திய ஆக்கத்தினும் கழிநல்குரவே தலை என்றெண்ணும் சான்றோர் (657), கடிந்த கடிந்து ஒருவியவர் (658); இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை செய்தவர் (659); அழக்கொண்ட எல்லாம் அழப்போம் என்றுணர்ந்தவர் (659); சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல், பசுமட் கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று என்றுணர்ந்தவர் (660); வினைத்திட்பம் என்பது ஒருவர் மனத்திட்பம் என்றறிந்தவர் (661), ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறு என்று ஆய்ந்தவர் (662); கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் என்பது அறிந்தவர் (663); சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்றுணர்ந்தவர் (664); வீறு எய்தி மாணும் வினைத்திட்பம் கொண்டவர் (665); எண்ணிய திண்ணியராகி, எண்ணிய எண்ணியாங்கு எய்தியவர் (666); உருள் பெருந்தேருக்கு அச்சாணி அன்னார் உடைத்தாகலின் உருவு கண்டு எள்ளாதவர் (667); கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது துாக்கம்