பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௭௧


(721); கற்றாருள் கற்றார்; கற்றவர்; முன் கற்ற செலச் சொல்லியவர் (722), அவையகத்து அஞ்சா அரியர் (723); கற்றார் முன் கற்ற செலச் சொல்லி தாம் கற்ற மிக்காருள் மிக்க கொண்டவர் (724); ஆற்றின் அளவறிந்து கற்றவர்; அவையஞ்சா மாற்றம் கொடுத்தவர் (725); நூலொடு நுண்ணறிவை அஞ்சாதவர் (726); பல்லவை கற்ற பயனுடையவர்(728); கூற்றுடன்று மேல்வரினும் எதிர் நிற்கும் ஆற்றல் உடையவர் (765); மறமானம் மாண்டவர் (755; கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது எனும் கொள்கையர் (772); உறின் உயிர் அஞ்சா மறவர் (778); இறைவன் செறினும் சீர் குன்றல் இலாதவர் (78); புரந்தார் கண் நீர்மல்கச் சாக்காடு கொண்டவர்: (780); நீரவர் (782); நவில் தொறும் நூல் நயம் போன்றவர்; பயில்தொறும் பண்புடையாளர் (783); மிகுதிக்கண் மேற்சென்று இடித்தவர் (784); அழிவினவை நீக்கி, ஆறு உய்த்து, அழிவின்கண் அல்லல் உழந்தவர் (787); உடுக்கை இழந்தவர் கைபோல் ஆங்கே இன இடுக்கண் களைந்தவர் (788; குடிப்பிறந்து தன்கண் இனப் பழி நாணியவர் (794); அழச் சொல்லி அல்லவை கடிந்தவர்; வழக்கறிந்த வல்லார் (795); உள்ளம் சிறுகுவ உள்ளாதவர் (798); உப்பாகிய சான்றோர் (802): தனிமை தலைநின்றவர் (814); ஒல்லும் கருமம் உடற்றியவர் (818); மன நல்லர் (823); ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தானடங்கியவர் (824); தகை மாண்ட தக்கார் (897); குன்றி அனைய செய்யாத குன்றன்னார் (898); ஏந்திய கொள்கையார் (899); சிறந்தமைந்த சீரார் (890); எண் சேர்ந்த நெஞ்சத் திடன் உடையார் (910); ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இழுக்காத குடிப்பிறந்தார் (952); பண்பில் தலைப் பிரியாப் பழங்குடியர் (955); சீரினும் சீரல்ல செய்யாப் பேராண்மையர் (962); பெருந்தகைமை பீடழியாப் பேராளர் (968); மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் (969); உலகு ஒளி தொழுது ஏத்தும் மானம் உடையார் (970); அருமைச் செயலாற்றிய பெருமை உடையவர் (975), பெருமிதம் கொள்ளாப் பெருமையர் (979); கடனறிந்து நல்லது மேற்கொண்ட சான்றாண்மையர் (981); அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு ஐந்து சால்பூன்றிய துரண் (983); ஊழி பெயரினும் தாம் பெயராச் சான்றாளர் (989);

நயனொடு நன்றி புரிந்த பயனுடைய பண்பாளர் (994), கைதூவாக் கருமம் செய்த பீடுடைய பெருமையர் (1021); ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையால் குடி நீளச் செய்தவர் (1022); குடிசெய்வல் என்ற கொள்கைத் தெய்வம் (1033); தம் குடியைத் தாழாது உஞற்றியவர் (1024); குற்றம் இலராய்க் குடிசெய்து வாழ்ந்தவர் (1025); அமரகத்து வன் கண்ணர் போலத் தமரகத்துக்கு ஆற்றியவர் (1027), இடுக்கண் கால் கொன்றிட வீழ்ந்த குடிக்கு அடுத்து ஊன்றிய நல்லாளாய் அமைந்தவர் (1030); உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்றறைந்தவர் (1032); கரவாது உவந்தீயும்