பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௭௫


“பெண்களையும், சூத்திரர்களையும் கொல்வது மிகவும் குறைந்த பாவமாகும்.”

- மனு: 11: 66.

“ஒரு பிராமணன் ஒரு தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச் சித்தம் எதுவோ, அதைத்தான் ஒரு சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்.”

- மனு: 11 - 181 - 132.

“சூத்திரன் பிராமணனுக்குப் பணிவிடை செய்வதே தவமாகும்”

- மனு: 1: 285.

“சூத்திரன் பொருள் சம்பாதித்தால் அது அவனுடைய எஜமானாகிய பிராமணனுக்குச் சேரவேண்டுமேயன்றிச் சம்பாதிப்பலனுக்குச் சேரலாகாது”

- மனு: 9 - 416.

“பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும் அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒருபோதும் நீதி செலுத்தலாகாது”

- மனு: 8 - 20.

இவ்வெடுத்துக் காட்டுகளே ஆரியவியல் தர்மத்தின் ஒருகுலத்துக் கொரு நீதி சொல்லும் ஒரவஞ்சகத் தன்மையையும், அதன் தாழ்ச்சியையும் இழிவையும் கொடுமையையும் உணர்ந்துகொள்ளப் போதுமானவையாகும்.

ஆனால், தமிழியலின்படி, “பொதுமையே - பொதுவுணர்வே - மக்கள் யாவர்க்கும் இருக்க வேண்டிய நல்லுணர்வுகளே - நன்னெறிகளே அறம்” என்பது திருவள்ளுவம். இவ்வுண்மைகளை இந்நூல் முழுதும் பரக்கக் காணலாம். இது தொடர்பாக மிக விரிவாக நூலுள் ஆராயப்பட்டிருக்கிறது. இதில் அறம் என்று வகுத்துக் கூறும் சில பல நல்லுணர்வுகளையும், பொதுமைக் கூறுகளையும் கீழே காண்க:


‘எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவது அறம்; அவ்வாறு ஒழுகுபவர் அறவோர்; அந்தணர்; அறவோர் அல்லாதவர் அந்தணரல்லர்.’ (30)


‘அறம் சிறப்பு தரும்; செல்வமும் ஈனும்’ (31)


‘அறத்தின் வழிப்பட்டதாகவே ஆக்கம் (செல்வம்) இருக்கவேண்டும்’(32)


‘ஒல்லும் (முடிந்த) வகையால் அறவினை செய்க.’ (33).