பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௭௮

முன்னுரை 


'புகழ்பட வாழ்வது' (237)

'வசை ஒழிய வாழ்வது' (240).

என்றும், அறவுணர்வைப் பல கோணங்களில் புலப்படுத்திக் காட்டுவார். அத்துடன்,

'அருளுணர்வே (வேறுபாடற்ற அன்பே) அறம்' (249)

'ஊனுண்டது அருளன்று; அறமுமன்று' (அதி:2)

'கரவாமை (மறைக்காமை, ஒளிக்காமை)யும்,
 கள்ளாமை திருடாமை)யும் அறம்' (288.)

'பொய்யாதது, வாய்மையாயிருப்பது அறம்' (அதி:30)

‘எப்பொழுதும், எதற்கும், யார்க்கும் மனத்தாலும்
தீமை நினையாததும், செய்யாததும் அறம்' (317)

'உயிர்களைக் கொல்லாதது அறம்' (321)

'பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் அறம்' (322)

'முறை செய்து மக்களைக் காத்தல் அறம்' (388)

'ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை' (அறம்) (541)

'குடிதழிஇக் கோலோச்சுதல் அறம்' (544)

'குடி புறம்காத்து ஒம்புதல் அறம்' (549.)

'செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்' - அறம். (627)

'இடுக்கண் படினும் இளி வந்த செய்யாமை அறம்' (654)

'ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும், சான்றோர்
பழிக்கும் வினை செய்யாமை, அறம்' (656)

'பழிமலைந்து ஆக்கம் எய்தாமை, அறம்' (657)

'சலத்தால் பொருள் செய்யாமை, அறம்' (660)

'கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத
செய்யாமை, அறம்' (699)

'பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யாமை அறம்' (700)

'தீதின்றி வந்த பொருள், அறம் (754)