பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௮௨

முன்னுரை 



        இசைக்கணக் கிரதம் சாலம்
தாரணம் அறமே சந்தம்
தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளின் றின்ன
மானநூல் யாவும் வாரி
வாரணம் கொண்ட தந்தோ
வழிவழிப் பெயரும் மாள'

- பழம்பாடல்.

இவற்றிலிருந்து, 'அறம்' என்ற ஒரு நூல் தனியே இருந்ததென்பதும், அந்நூல் முன்னரே கடற்பெருக்கினால் அழிந்துபட்ட நூல்களுள் ஒன்றாயிருந்த தென்பதும் அறியப்பெறுகிறது.

இனி, இத் திருக்குறளுள்ளும் நூலாசிரியர் 'அறம் என்பது இன்னது எனத் தெளிவாகவோ வரையறுத்தோ சொல்லவில்லை.

சில விடங்களில் நல்ல மனவுணர்வையும், உயர் குணத்தையும் அறம் என்பாா்:

(எ-டு)

'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்'
-33.

'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்'
-35.
'அறத்திற்கே அன்பு சார்பு என்ப"
-76.

பிறனாக்கம் பேணாது அழுக்கறுப்பான்

அறனாக்கம் வேண்டாதான்'
-163.
'அறனறிந்து வெஃகா அறிவுடையான்'
-179.

- என்பன போன்றவை.

சில விடங்களில் நல்ல சொற்களையும் நல்ல செயல்களையும் அறம் என்பார்.

(எ-டு)

'எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுதல்'
-30.

'அறவினை ஒவாதே செல்லும் வாயெல்லாம் செயல்'
-33.

'அன்றறிவாம் என்னாது அறம்செய்க'.
-36.

'செயற் பாலது ஒரும் அறனே'
-40.