பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௮௩


'முகத்தான் அமாந்தினிது நோக்கி அகத்தானாம்

இன்சொல் இனதே அறம்'
- 93.

'புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலில் சாதல்

 அறங்கறும் ஆக்கம் தரும்'
- 183.

'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற

 செய்யாமை செய்யாமை நன்று'
- 297.

- என்பன போன்றவை.

சில இடங்களில் வாழ்வமைப்பையே அறம் என்று விளக்குவார்.

(எ-டு):

'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை

- 49.

'அறத்தாற்றின் இல்வாழ்க்கை

- 46.

'அறனிழுக்கா இல்வாழ்க்கை

- 48.

'அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

பெண்மை நயவா தவன்'

- 147.

'பிறன்மனை நோக்காத பேராண்மை அறம்'

- 148.

- என்று இவ்வாறு மனம், சொல், செயல், வாழ்க்கை என்னும் அனைத்து மாந்தவியல் கூறுகளிலும் அறம்' எனும் பொதுநலம் பேணும் ஒழுங்குணர்வு ஊடுருவி நிற்பதைத் திருக்குறள் போல் வேறு எந்த நூலும் எடுத்துக் கூறவில்லை.

ஆசிரியர், இவ்வாறு மனம், சொல், செயல், வாழ்க்கை ஆகிய அனைத்திலும் அறவுணர்வு பரவியிருத்தலை, வேறு வகையாகவும் விளக்கி உறுதிப்படுத்துவதையும் நாம் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும் அவ்வகையில்,

'பழிப்பது இல்லாதது அறம்'
- 49.

'நல்லவை எல்லாம் அறம்'
- 96.

'கடன் என்ப நல்லவை எல்லாம்’
- 981.

- என்று கூறி மக்கள் தமக்கும் பிறர்க்கும் நன்மை பயக்கின்ற பொதுநலம் தருகின்ற செயல்களையே அறச்செயல்கள் என்று கருதுதல் வேண்டும் என்பார்.

மக்கள் எச்செயல் செய்தாலும், அது அறவுணர்வு என்னும் பொதுநலவுணர்வு நோக்கியே செய்யப்பெறுதல் வேண்டும் என்றும் வலியுறுத்துவார். அப்பொழுதுதான் உலகநலம் கிடைக்கும் இயற்கை தரும்