திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார்
௭
திருக்குறள், தான் தோன்றிய காலத்துக்கு முந்தைய நூல்களினின்றும் பெரிதும் வேறுபட்டு விளங்கி நிற்கின்றது. அதற்குப் பின்னெழுந்த நூல்களிலெல்லாம் அதன் தாக்கம் தட்டுப்படுகின்றது. திருவள்ளுவரால் ஈர்க்கப்பெறாத அறிஞர்கள் எவரும் இருக்க முடியாது. குறட்பாவை மேற்கோள் காட்டுவதன் மூலம் தம் கருத்துக்கு வலிமை சேர்க்கவும் அதனைச் செல்லுபடியாக்வும் முற்படுபவர்கள் எண்ணறோர்!
திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கொண்டு! அதன்வழி வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பதைவிட, இப்பெருநெறிக்குரியதான அதனை, முன்னரே கட்டமைக்கப்பட்டுத் தாம் சார்ந்திருக்கும். ஏதேனும் ஒரு நெறிக்கு உரியதாக ஆக்கிவிடவும், காட்டிக்கொள்ளவும் முயன்றவர்கள் மிகப்பலர். இம்முயற்சி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தொடர்ந்து, இன்றளவும் நீடிப்பதால், ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் திருக்குறளுக்குப் புதுப்புது விளக்கங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆயினும் அதன் மெய்ப்பொருள் இதுவெனத் தெளிவுப்டுத்தப்படாத நிலையே நீடிக்கிறது.
பல்துறை சார்ந்த சீரிய அறிவாற்றலாலும், பல்வேறு ஆய்வுகளாலும் பாவலரேறு ஐயா அவர்கள் திருக்குறள் தொடர்பாக மேற்கொண்ட அருமுயற்சியின் வெளிப்பாடே திருக்குறள் மெய்ப்பொருளுரை!
திருக்குறளுக்குப் பாவேந்தர் பாரதிதாசனார் உரை (வள்ளுவர் உள்ளம்) எழுதத் தொடங்கிய போது, பரிமேலழகர் உரையில் ஆங்காங்