பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௯௨

முன்னுரை 


தன்மை கூறும் இடங்களிலெல்லாம் பொதுப்பால் சுட்டுச் சொற்களையும், தாழ்வுத்தன்மை கூறும் இடங்களிலெல்லாம் ஆண்பால் சுட்டுகளையுமே நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார் என்று கருதவேண்டியுள்ளது.

ஆனால், இதற்கு நெறிவிலக்காகவும் பற்பல இடங்கள் உள்ளன என்றும் அறிகிறோம். அவற்றுள் சில வருமாறு:


1) பொதுப்பாலில் உயர்வு சுட்டாமல் தாழ்வு சுட்டியது:

‘விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார்' - 88

'கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த' - 109

'உய்வில்லை எந்நன்றி கொன்றார்க்கும்' - 110

'இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி' - 137

'இகழ்வார்ப் பொறுத்தல் தலை.' - 151

'வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை' - 153

'ஒறுத்தாரை ஒன்றாக வையாரே' - 155

'ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்' - 156

'மிகுதியான் மிக்கவை செய்தாரை' - 158

'துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்' - 168

- போல்வன.


2) ஆண்பாலில் தாழ்வு கட்டாமல் உயர்வு சுட்டியது:

'வருவிருந்து வைகலும் ஓம்புவான்' - 83

'முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான்' - 84

'விருந்தோம்பி மிச்சில் மிசைவான்' - 85

'வருவிருந்து பார்த்திருப்பான்' - 86

'நிலையில் திரியாது அடங்கியான்' - 17

'அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான்' - 176

'ஒத்ததறிவான் உயிர்வாழ்வான்' - 214

'பேரறிவாளன் திரு' - 215

'நயனுடையான்' - 216

'பெருந்தகையான்' - 217

- போல்வன.