பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடக்கமுடைமை

தகைத்து-அவரெல்லாரினும் செல்வமுடையார்க்கே மிகவும் நன்மை உடைத்தாம்.

செல்வம்-மிகுதி.

இஃது, அடக்கம் செல்வமுடையார்க்கு உயர்வைத் தரு மென்றது. ௨௬௮.

Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.தம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் உழைந்து.

இ-ள்:- கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான்-வெகுளியும் அடக்கிக் கல்வியும் உடையவனாய் (அதனால் வரும் பெருமிதமும்) அடக்க வல்லவன்மாட்டு, அறம் உழைந்து செவ்வி பார்க்கும் ஆற்றின்-அறமானது (தானே வருதற்கு) வருந்திக் காலம் பார்க்கும் நெறியானே.

இஃது அடக்கமுடையார்க்கு அறம் உண்டா மென்றது. ௨௬௯.

Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.டக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

இ-ள்:- அடக்கம் அமரருள் உய்க்கும்-(மனம் மொழி மெய்களை அடக்கி ஒழுக அவ்) அடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்; அடங்காமை ஆர் இருள் உய்த்து விடும்-(அவற்றை அடக்காதொழுக அவ்) அடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்தி விடும்.

மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கும் இதுவே பயனென்று தொகுத்துக் கூறினார். ௨௭0.

௨௮-வது.-தவமுடைமை.

தவமாவது, ஊணும் உறக்கமும் குறைத்தலும், வெயிலும் பனியும் தாங்கலும், தேவர் வழிபாடு முதலாயின மேற்கொண்டு

௯௭

13