பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடாவொழுக்கம்

வேண்டிய வேண்டியாங் கெய்தலான் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

இ-ள்:- வேண்டிய வேண்டியாங்கு எய்தலான்-விரும்பியன விரும்பின படியே வருதலால், செய் தவம் ஈண்டு முயலப் படும்-நல்ல தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும்.

இது, போக நுகர்ச்சியும் தவத்தானே வரு மென்றது. ௨௮0.

௨௯-வது.-கூடா வொழுக்கம்.

கூடாவொழுக்கமாவது, மேற் கூறிய தவத்திற்குப் பொருந்தாத ஒழுக்கம். தவமுடையோரால் விலக்கப்பட வேண்டியதாதலின், இது தவமுடைமையின் பின் கூறப்பட்டது.

னத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந் தொழுகும் மாந்தர் பலர்.

இ-ள்:- மாசு மனத்தது ஆக-மாசு மனத்தின் கண் உண்டாக வைத்து, மாண்டார் நீர் ஆடி- மாட்சிமைப்பட்டார் நீர்மையைப் பூண்டு, மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்-(பொருந்தாத இடத்திலே) மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்.

[மாட்சிமைப்பட்டாரது சீர்மை-தவத்தினரது வேடம் முதலியன. பொருந்தாத இடம்-தீய ஒழுக்கத்திற்குரிய இடம். மறைந்து-பிறர் அறியாது.]

மனத்தது என்பது வேற்றுமை மயக்கம், ஆறாம் வேற்றுமை உருபு ஏழாம் வேற்றுமைப் பொருள் தந்து நின்றமையால்.

இது, கூடா வொழுக்கத்தால் மனமாசு உண்டாகு மென்றது. ௨௮௧.

புறம்குன்றி கண்டனைய ரேனும், அகம்குன்றி
மூக்கின் கரியார் உடைத்து.

௧0௧