பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழுக்காறாமை

[மழித்தல்-மொட்டையடித்தல், நீட்டல்-சடை வளர்த்தல். கடிதல்-விலக்குதல், உலகத்தார் கடிந்தவை-அறிவுடையோர் விலக்கியவை. அவை தீய ஒழுக்கங்கள்.]

இது, வேடத்தால் பயனில்லை, நல்ல ஒழுக்கம் வேண்டும் என்றது. ௨௮௯.

ணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்னார்
வினைபடு பாலால் கொளல்.

இ-ள்:- கணை கொடிது-(செவ்விய) கணை கொடுமையைச் செய்யும்; கோடு யாழ் செவ்விது-கோடிய யாழ் செவ்வையைச் செய்யும்; ஆங்கு-அது போல, (யாவரையும் வடிவு கண்டு அறியலாகாது;) அன்னார் வினை படு பாலால் கொளல்-அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே அறிக.

இது, வேடத்தை ஆதாரமாகக் கொள்ளாது, செயலை ஆதாரமாகக் கொண்டு, ஒருவரை (இத்தன்மையரென்று) மதிக்க வேண்டு மென்றது. ௨௯0.

௩௰-வது.-அழுக்காறாமை.

அழுக்காறாமையாவது, பிறர் ஆக்கம் முதலாயின கண்டு பொறாமையால் வருகின்ற மனக்கோட்டத்தைச் செய்யாமை. [இது முதலாகக் கூடாவொழுக்கப் பகுதியில் சிலவற்றை விதந்து கூறுகின்றார். அழுக்காறு இம்மையினும் மறுமையினும் நன்மையொன்றையும் பயவாது தீமையையே பயப்பதாதலால், அழுக்காறாமை முதற்கண் கூறப்பட்டது.]

ழுக்காறாக் கொள்க ஒருவன்,தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு.

௧0௫

14