பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறங்கூறாமை

இ-ள்:- அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்-அறத்தை அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை, திரு திறன் அறிந்து சேரும்-திருமகள் (தானே) தகுதியறிந்து சேர்வள்.

அறன் அறிதல்-பிறர்பொருளை விரும்பாமை அறனென்று அறிதல்.

இது, வெஃகுதல் செய்யாதார்க்குச் செல்வம் உண்டா மென்றது. ௩௧0.

௩௨-வது.-புறங்கூறாமை.

புறங்கூறாமையாவது, யாரையும் இகழ்ச்சியாக அவர் புறத்தே உரையாமை. [புறங்கூறுதல் வாக்கால் நிகழும் குற்றங்களுள் மிகக் கொடியதாதலால், இவ்வதிகாரத்தை மனத்தால் நிகழும் அழுக்காற்றையும் வெஃகுதலையும் நீக்கவேண்டு மென்று பின்னர்க் கூறினார்.]

ண்ணின்று கண்ணறச் சொல்லினும், சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.

இ-ள்:- கண் நின்று கண் அற சொல்லினும்-(ஒருவன்) கண்ணெதிரே நின்று கண்பேர்த்துச் சொல்லினும் (அமையும்;), பின் முன் நின்று நோக்காச் சொல் சொல்லற்க-பிற்காலத்து அவன் முன்னே நின்று (எதிர் முகம்) நோக்கவொண்ணாத சொல்லைச் சொல்லாதொழிக.

இது, புறங்கூறுதலைத் தவிர்க என்றது. அன்றியும், கடிய சொல் கூறலும் ஆகா தென்றது. ௩௧௧.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின், சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.

இ-ள்:- புறங்கூறி பொய்த்து உயிர் வாழ்தலின்-(காணா இடத்துப்) புறஞ் சொல்லி (க்கண்ட இடத்து)ப் பொய் சொல்லி உயி

௧௧௩

15