பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்


௩௫-வது.-துறவுடைமை.

துறவென்பது, ஒருவன் தவம் பண்ணா நின்ற காலத்து யாதாயினும் ஒரு தொடர்ப்பாடு உளதாயினும் அதனைப் பற்றறத் துறத்தல். இது மயக்கமற்றார்க்கு வருவதொன்றாதலின், நிலையாமையின் பின் கூறப்பட்டது.

டல்வேண்டும் ஐந்தின் புலத்தை; விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

இ-ள்:- ஐந்தின் புலத்தை அடல் வேண்டும்-(துறப்பாற்குப்) பொறிகளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையும் கொல்லுதல் வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்-(அதற்காகத் தான்) விரும்பின எல்லாவற்றையும் ஒரே காலத்தில் விடுதல் வேண்டும்.

[பொறிகள் ஐந்தாவன-மெய், வாய், கண், மூக்கு, செவி. அவற்றிற்கு நுகர்ச்சியான (அஃதாவது அநுபவமான) ஐந்தாவன-ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை. அந்நுகர்ச்சியான ஐந்தையும் கொல்லுதலாவது, அவை தன் மனத்தைக் கவராதபடி அவற்றை அடக்கியாளுதல்.]

இஃது, ஐம்புலங்களையும் வெல்ல வேண்டுமென்பதூஉம், அதற்குத் தான் விரும்பிய பொருள்களையெல்லாம் ஒருங்கு விட வேண்டுமென்பதூஉம் கூறிற்று. ௩௪௧.

யல்பாகும் நோன்பிற்கொன் றின்மை; உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

இ-ள்:- ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பாகும்-யாதொரு பொருளையும் இலதாதல் தவத்திற்கு இயல்பாகும்; உடைமை பெயர்த்தும் மயல் ஆகும்- பொருளுடைமை மீண்டும் (பிறத்தற்குக் காரணமான) மயக்கத்தைத் தரும்.

௧௨௪