பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்யுணர்தல்

இது, துறவினது மறுமைப் பயன் கூறிற்று. ௩௪௮.

யானென தென்னும் செருக்கறுப்பான்; வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.

இ-ள்:- யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்-யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்-தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லுவன்.

இது, துறவினால் வீடு எய்து மென்றது. ௩௪௯.

ற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

இ-ள்:- பற்று அற்றான் பற்றினை பற்றுக-பற்றினை அறுத்தானது பற்றினைப் பற்றுக; அப்பற்றை பற்று விடற்கு.பற்றுக-அதனை(ப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது) பற்று விடுதற்காகப் பற்றுக.

பற்றற்றான் பற்றாவது, தியான சமாதி.

இது, பொருள்களின் பற்றினை விடுதற்கு மெய்ப்பொருளைப் பற்றுக என்றது. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது. ௩௫0.

௩௬-வது.-மெய்யுணர்தல்.

மெய்யுணர்த லென்பது, எக்காலத்தினும் அழியாது எவ்விடத்தினும் நிற்கும் பொருள் இதுவென உணர்தல். இது பற்றறத் துறந்தாரது உள்ள நிகழ்ச்சியாதலான், துறவுடைமையின் பின் கூறப்பட்டது.

யுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவற்கு.

௧௨௭