பதிப்புரை
மை எழுபிறப்பும்” உள்ளத்தக்கவையுமாகும்.
இந்நூலின் ஒவ்வொரு பாலும் அச்சாகி முடித்தவுடன் வெளிவருதல் நலமென்று எனக்கு இப்பொழுது தோன்றுவதனால், இன்றுவரையில் அச்சாகி முடிந்திருக்கிற அறத்துப்பாலை இப்பொழுது வெளியிடுகின்றேன். பொருட்பாலும் காமத்துப்பாலும் விரைவில் அச்சாகி வெளிவரும்.
இந்நூலை யான் அச்சிடத் தொடங்கிய பின்னர்க் காகிதத்தின் விலை மிக ஏறிவிட்டதால், இதற்கு முன் குறித்த விலை ரூபா இரண்டை ரூபா மூன்றாக ஏற்றி, அதனை அறத்துப்பாலுக்கு ரூபா 1-0-0ம், பொருட்பாலுக்கு ரூபா 1-1-0ம், காமத்துப்பாலுக்கு 0-12-0 மாக விதானம் செய்துள்ளேன்.
திருவள்ளுவர் திருக்குறளைக் கற்கும் ஒவ்வொருவரும், தத்தமக்குக் கிடைக்கும் உரைகளைத் துணையாக வைத்துக்கொண்டு, குறள்களின் பொருள்களைத் தாமே ஆராயவேண்டு மென்பது என் விருப்பம். பரிமேலழகருரையையும் அதன் வழிவந்த உரைகளையும் தவிர வேறு உரைகளை யாரேனும் காண்பாராயின், அவ்விவரத்தை எனக்குத் தெரிவிக்குமாறு அவர்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
பிரம்பூர், சென்னை. பிங்கள ௵ சித்திரை ௴ 13௳ |
வ.உ.சிதம்பரம் பிள்ளை. |
vi