பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

மையைத் தரும் பெரிதான ஓர் ஆக்கமேயாயினும், சான்றோர்க்கு கடை-உயர்ந்தோர்க்கு ஆகாது.

வேள்வியின் வரும் கொலையும் ஆகாது, பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் என்று கூறினார். ௧௮0.

௧௯-வது.-புலான் மறுத்தல்.

புலால் மறுத்தலாவது, (புலால் தின்றால் அருளில்லையா மென்பதனால்) புலாலை விடுகை. [புலால் கொலையால் வருதலானும், புலாலுண்ணல் கொலைக்கு ஏதுவாகலானும், இல்லதிகாரம் கொல்லாமைபின் பின் கூறப்பட்டது.]

ண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்
புண்ண துணர்வார்ப் பெறின்.

இ-ள்:- புலாலை உண்ணாமை வேண்டும்- புலாலை உண்ணாமை வேண்டும்; உணர்வார் பெறின்-(அதன் உண்மைத் தன்மையைக்) காண்பார் உண்டாயின், அது பிறிது ஒன்றின் புண் - அது பிறிது ஒன்றின் புண்ணாகும்.

[பிறிது ஒன்றின்-வேறு ஓர் பிராணியின்.]

இது, புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉம் கூறிற்று. ௧௮௧.

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை; அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

இ-ள்:- பொருள் ஆட்சி போற்றுதார்க்கு இல்லை-பொருள்தனை ஆளுதல் (அதனைக்) காக்கமாட்டாதார்க்கு இல்லை; ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை-அது போல அருளினை ஆளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை.

ஊனுண்ண அருட்கேடு வரும் என்றார். ௧௮௨.

௬௬