பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


துறவற வியல்.

[துறவறமாவது, இல்லின் கண்ணின்று நீங்கித் தவம் முதலாயின செய்தல். அது கூறிய அதிகாரம் பதின்மூன்றினும் அருளுடைமை முதலாகத் தவமுடைமை ஈறாக இல்லின் கண்ணின்று நீங்கியாரால் செய்யப்படுவன நான்கும் கூடாவொழுக்கம் முதலாகப் பயனில சொல்லாமை ஈறாக அவரால் தவிரப்படுவன ஐந்துமாக ஒன்பது அதிகாரத்தால் கூறி அதன்பின் துறவிற்கு இன்றியமையாது அறிதற்பாலதாகிய நிலையாமை ஓர் அதிகாரத்தால் கூறி; அதன்பின் துறவிலட்சணம் ஓர் அதிகாரத்தால் கூறி; துறவினால் எய்தற் பாலதாகிய மெய்யுணர்தல் ஓர் அதிகாரத்தால் கூறி ; பிறப்பிற்கு ஏதுவாகிய அவாவினை அறுத்தல் ஓர் அதிகாரத்தால் கூறினாராகக் கொள்ளப்படும்.]

௨௫-வது.-அருளுடைமை.

அருளுடைமையாவது, யாதானும் ஓர் உயிர் இடர்ப்படின் அதற்காகத் தன்னுயிர்க் குற்ற துன்பத்தினால் வருந்துமாறு போல் வருந்தும் ஈரமுடைமை.

Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.ல்லாற்றான் நாடி அருளாள்க; பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.

இ-ள்:- நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க-நல்ல வழியாலே நாடி அருளை உண்டாக்குக; பல் ஆற்றான் தேரினும் அஃதே துணை-பல வழியிலும் (ஓடி) ஆராயினும் (தமக்கு) அருளே துணையாம்.

நல்லாற்றான் நாடி என்றது, அருளுடைமை யுண்டாகப் பல அறங்களையும் செய்து என்றவாறு. [நாடி-விரும்பி-செய்து.]

இஃது, அருளுடைமை வேண்டு மென்றது. ௨௪௧.

௮௭