பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

101



64. சிவன்முதலே யன்றி முதலில்லை யென்றுஞ்
சிவனுடைய தென்னறிவ தென்றுஞ்-சிவனவன
தென்செயல தாகின்ற தென்று மிவையிற்றைத்
தன்செயலாக் கொள்ளாமை தான்.

இது, மேற்குறித்த வண்ணம் கூட்டில்வாள் சாத்தி நிற்றலாவது இதுவென விளக்குகின்றது.

(இ-ள்) சிவனாகிய முதல்வனையன்றி நான் என எடுத்துரைத்தற்குரிய வினைமுதல் வேறு இல்லை யென்றும், “யானே அறிந்தேன்’’ என்னும் ஆன்மாவாகிய என்னுடைய அறிவெல்லாம் அம்முதல்வனது அறிவேயென்றும், 'யான் இதனைச் செய்தேன்’ எனக் கருதும் என்னுடைய செயலெல்லாம் கூர்ந்து நோக்கின் அம்முதல்வனுடைய செயலேயாகின்றதென்றும் இவ்வாறு அறிவன செய்வன எல்லாவற்றையும் தன்னுடைய செயலாகக் கொள்ளாமல் இறைவனுடைய செயலென்றே கொண்டொழுகுதல்தான் (மேற்குறித்த கூட்டில் வாள் சாத்தி நிற்றல்) எ-று.

ஆன்மாவுக்கு அறிவு செயல்கள் விளங்குதலும் நுகர்பொருள்களிற் சென்று பற்றுதலும் உயிர்க்குயிராய் உள் நின்று அறிந்து அறிவித்து உதவியருளும் இறைவனது திருவடியையின்றி நிகழ்தல் இல்லை யென்பது,

“எவ்விடத்தும் இறையடியை யின்றியமைந்தொன்றை
       அறிந்தியற்றியிடாவுயிர்கள்; இறைவன்தானும்
செவ்விதினின் உளம்புகுந்து செய்தியெலாமுணர்ந்து
       சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன்”

[சித்தியார்-சுபக்]

எனவரும் திருவிருத்தத்தால் இனிது புலனும். இவ்வாறு இறைவன் கட்டுநிலையிலும் வீட்டுநிலையிலும் உயிர்கட்குப் பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு காட்டுதலும் உயிர்களுடனிருந்து காணுதலும் ஆகிய இருவகையுதவிகளையும் புரிந்தருளுந் திறத்தினை யெண்ணித் தம்மை மாயப்படை வந்து தாக்காதவாறு அம்முதல்வனது திருவடி ஞானமாகிய வாட்படையைத் தாங்கி நிற்றலே கூட்டில் வாள்சாத்தி நிற்றலாம் என்க.

"சலமிலனாய்” எனவரும் சித்தியார் திருவிருத்தத்துள்

‘உலகினின் என்செயலெல்லாம் உன்விதியே நீயே உள்நின்றுஞ், செய்வித்துஞ் செய்கின்றாய்’ என்றும், நிலவுவதோர் செயலெனக்