பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

109


௩உ. துரியங் கடந்தவித் தொண்டர்க்குச் சாக்கிரம்
துரியமாய் கின்றதென் றுந்தீபற
துறந்தா ரவர்களென் றுந்தீபற.

இது, சீவன் முத்தர்களாகிய சிவஞானிகளை உலகவாதனை தாக்குதல் இல்லையென்கிறது.

(இ-ள்) தற்போதத்தைவிட்டு இறைவன் திருவடியிலே பொருந்தி நிற்கும் மெய்யடியார்கட்குப் பிராரத்தமெனப்படும் நுகர்வினையினாலே உலகப் பொருள்களைக் காணும் விழிப்புநிலை வந்துகூடிற்றாயினும், மேலாகிய பரம்பொருளோடு ஒன்றி உயிர்ப்படங்கி நிற்றலாகிய ஞானமே மேற்பட்டு விளங்குவதன்றி ஒருகாலத்தும் உலக வாதனை வந்து பொருந்துதல் இல்லை. அத்தகைய பெருமக்களே யானென தென்னும் இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டொழித்த துறவறச் செல்வர்கள் என்று உணர்க எ-று.

“இதில் முற்படுந் துரியம் என்றது. தற்போதத்தை; இரண் டாவது துரியம் என்றது, பரபோகத்தையெனக் காண்க” என்பர் சிற்றம்பலவர். துரியங்கடத்தலாவது, ஆன்மா நிலம் முதல் நாதம் ஈருகிய தத்துவங்களையும் ஐந்து மலங்களையும் அருளாலே கண்டு நீங்கித் தன்னையுணர்ந்து தன்னையும் பொருளன்றென்று கண்டு, தன் செயலற்று,இறைவன் திருவடியிலே பொருந்தி நிற்றல். சாக்கிரம் என்றது, ஆன்மா எல்லாக் கருவிகளோடுங் கூடி நுதற்கண் நிலைபெற்று உலகப்பொருள்களைச் சுட்டியறியும் விழிப்புநிலையினை. துரியமாய் நிற்றலாவது, இத்தகைய விழிப்பு நிலையிலும் உலக வாதனை வந்து தம்மைத் தாக்காதவாறு துரிய நடுவூடிருந்த பெரிய பொருளாகிய சிவத்துடன் ஒன்றிப் பேரின்பநிலையில் நிற்றல்.

“அறவேநின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன் றறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே”

எனத் திருவாதவூரடிகள் இத்தொண்டர்களின் தன்மையினை விளக்குதல் இங்குக்கருதத் தகுவதாகும். இத்தொண்டர் என்னும் அண்மைச் சுட்டு, நமக்கு அணுக்கமாகிய இந்தச் சைவசித்தாந்த மெய்ந்நெறியில் நின்று இறைவன் திருவருளால் பசுபோதங்கெட்டுச் சிவமாந் தன்மைப் பெருவாழ்வினைப் பெற்ற திருஞானசம்பந்தப் பிள்ளையார், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரடிகள் முதலிய திருவருட் செல்வர்களை. யான் எனது என்னும் இருவகைப்பற்றும் நீங்கத் தன் செயலற்று எல்லாம் இறைவன் செயலே எனக் கொண்டுவாழ்ந்த