________________
மக்களின் தெய்வங்களெல்லாம் இந்த மக்களைப் போலவே ஏதேனும் ஓர் ஆபுதம் ஏந்தி காவலுக்குரிய வயல்களின் ஓரத்திலும் கண்மாய் கரையிலும், ஊர் மந்தையிலும் ஊர் எல்லையிலும் அபராது கண் விழித்து நிற்கின்றன. இவை உட்காருவதும். கண்மூடுவதும் கிடையாது. இந்த மக்களைப் போலவே இத் தெய்வங்களும் முறுக்கிய மீசையும் வரிந்து கட்டிய வேட்டியுமாக சட்டையில்லாமல் நேரங்களில் (சில தலைப்பாகையுடன்) கள்ளும் கறியும் உண்பவையாக வாழ்கின்றன. மிகப் பழங்காலத்திலிருந்து மக்களினப் பெருக்கம், அதற்குத் தேவையான 2-600762 உற்பத்திப் பெருக்கம், உணவு உற்பத்திக்கு அடிப்படையான கால்நடைப் பெருக்கம், மழை இவையே மனிதகுல வரலாற்றில் சமுதாபத்தின் லட்சியமும் தேவையுமாய் இருந்திருக்கின்றன. எனவேதான் இன்றும் எல்லா மதத்தினரும் மகப்பேறு என்பது இறைவனால் அருளப்பட்டது என்றும் அதைத் தடுத்து நிறுத்துவது பாவம் என்றும் அடிமனத்தில் எண்ணுகின்றனர். உயிர்களைப் பெருக்கும் ஆற்றல் பெண்களுக்குரிய பண்பாகும். னவே பெண் தெய்வங்கள் எல்லாம் சமூகத்தில் இத்தகைய தேவைகளை நிறைவு செய்யப் பிறந்தவையே. நோய்க் காலத்தில் குழந்தையைத் தாப் அக்கறையடன் பேணிக் காக்கிறாள். (அம்மை) கோமாரி முதலிய) இப்பெண் தெய்வங்களும் நோய்களிலிருந்து மக்களையும், கால்நடைகளையும் காக்கின்றன. GT 601 சிவபெருமான். விஷ்ணு. மீனாட்சி முதலிய பெருந் தெய்வங்கள் எல்லாம் இப்பண்புகளைக் கொண்டிருக்கவில்லையே என்? என்ற சந்தேகம் அடுத்து எழுகின்றது. இத் தெய்வங்கள் ஆதியில் இப்படிப் பிறந்தவைதான். இனக்குழு மக்களிடைபேதான் இத்தெய்வங்கள் பிறந்தன நாளடைவில், தனித் சொத்துரிமை