பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வளரவளா உடலால் உழைப்பவர்கள், உடமையாளர்கள் என்ற பிரிவு சமூகத்தில் தோன்றியபோது இத்தெய்வங்கள் உடமையாளர்கள் தெய்வங்களாகிவிட்டன. அவர்களுடைய பண்பாடுகளெல்லாம் (புலால் உண்ணாமை போன்றவை) இத்தெய்வங்களின் பண்புகளாகி விட்டன. ம் காடுகளில் கூட்டம் கூட்டமாகத் திரிந்த மனிதன் தரைமீது கிடந்தவற்றைப் பொறுக்கியும். தரையைத் தோண்டியும் உணவைச் சேகரித்தான். பின்னர் வேட்டையாடினான்; மீன் பிடித்தான்; பின்னர் கால்நடைகளைப் பழக்கினான்; மேய்ச்சல் நிலம் தேடி பெயர்ந்தான்; அக்காலத்தில் பெண்கள் கண்டுபிடித்த விவசாயத்தைக் கால்நடைகளின் துணை கொண்டு வளர்த்தான். போரில் தான் வென்ற பகைவர்களின் உடல் உழைப்பினைக் கொண்டு பயிர் நிலங்களின் அளவைப் பெருக்கினான். ஒவ்வொரு கட்டத்திலும் அவனுக்கு இயற்கை துணை செய்தது; சில நேரங்களில் பழிவாங்கியது. மனிதக் கூட்டங்கள் இடையறாது போராடி வளர்ச்சி பெற்றன. வாழ்நிலை, நம்பிக்கை இன்னும் பல காரணங்களால் அவை இனக்குழுக்களாயின. விவசாயம் பெருகிய நிலையில் தனிச் சொத்துடைமை வளர்ந்தது; போர்களும் பெருகின; இனக்குழுக்கள் தம்முள் போராடின; தொடர்ந்த போராட்டங்களால் இனக்குழுக்கள் கரைந்து அரசுகளும், நாடுகளும் உருவாயின. தோற்றுப் போனவர்கள் கடுமையான உடலுழைப்பிற்குத் தள்ளப்பட்டனர். வென்ற கூட்டத்தார் உடலுழைப்பிலிருந்து விலக ஆரம்பித்தனர். நாளடைவில் உடல் உழைப்பு இல்லாதவர்கள் உடைமையாளராகவும், மேல்தட்டு மக்களாகவும் மாறிவிட்டனர். இவ்வளர்ச்சிப் போக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் சமூகத்தின் தேவைகள் மாறுபட்டன. அதற்குத் தகுந்தாற்போல் தெய்வங்களும், தெய்வ நம்பிக்கைகளும் வேறுபட்டன; வளர்ந்தன. 5