பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேட்டையாடிய நிலையில் குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் குகைச் சுவரில் ஓவியங்கள் தீட்டினர். இவ்வோவிபங்கள் ஒரு தாவரம் அல்லது விலங்காக இருந்தது. அவை அந்த இனக்குழுவின் குலக்குறியீடாக இருந்தன. இந்தக் குலக்குறிப்பீடுகள் புதிரானவை யாகவும், புனித ஆற்றல் உடையனவாகவும் வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய வல்லவையாகவும் கருதப்பட்டன. எனவே மந்திரச் சடங்குகளுக்கு (Magical rites) உரியவையாகவும் கருதப்பட்டன. இம்மந்திரச் சடங்குகளே மதத்தின் மிகப் பழைய தொடக்க நிலையாகும். (இந்தக் குலக்குறியீடுகளே பின்னர் ஒரு கட்டத்தில் மனிதவடிவு பெற்ற தெய்வங்களின் கையில் ஆயுதங்களாகவும். அணிகளாகவும் தெய்வ வாகனங்களாகவும் வளர்ச்சி பெற்றன). ஒவ்வொரு கட்டத்திலும் சமூகத் தேவைகள் மாறமாறத் தெய்வங்களும் அவற்றின் பண்புகளும் மாறின. உதாரணமாக. வேட்டைச் சமூகத்தில் வேட்டையாடப்பட்ட விலங்குகள் ஊர்ப்பொது மன்றத்தில் கொண்டு வரப்பட்டு அந்த இனக்குழு மக்களால் தமக்குள் சமமாக அல்லது வேலைக்குத் தகுந்த அளவில் பங்கீடு செய்யப்பட்டன. இப்பங்கீடு தெய்வத்தின் பெயரால் செய்யப்பட்டது. பங்கீடு சரியாக இல்லாவிட்டால் தெய்வம் தண்டிக்கும் என்பது இனக்குழு மக்களின் நம்பிக்கை. இப்பங்கீட்டுத் தெய்வத்தைப் பற்றிய தொல்லெச்சம் போன்ற செய்திகள் பழைய இலக்கியங்களிலும், புராணங்களிலும் காணப்படுகின்றன. தமிழிலக்கியத்தில் இத்தெய்வம் பால்வரை தெய்வம் (பால் பிரிவு) என்று கூறப்பட்டுள்ளது. இத்தெய்வத்தின் விருப்பத்தின் பேரில்தான் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்து உறவு கொள்கின்றனர், என்பது பழந்தமிழர் நம்பிக்கை. ஆரியரின் ரிக் வேதத்தில் 'ரித'(Rta) என்னும் பங்கீட்டுத் தெய்வம் மறைந்தது பற்றிய புலம்பல்கள் இடம் பெறுகின்றன. கிரேக்கர்