பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அடிதொழுதல் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகம் பல புதிய மாற்றங்களைக் கண்டது; கண வருகிறது. அவற்றுள் சில தனிமனித ஒழுக்கம் சார்ந்தவை. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு தனி மனிதனின் காலில் மற்றொரு மனிதன் விழுந்து வணங்குவது, மானக் குறைவான செயல் என்ற எண்ணம் அரும்பியது. பின்னர் அது வளர்ந்தது. இப்பொழுது இந்த நூற்றாண்டின் இறுதியில் மீண்டும் அந்த வழக்கம் உயிர்த்தெழுந் துள்ளது. பொது வாழ்க்கையில் ஈடுபட்டோர் எந்தவித வரைமுறை பின்றி நாள்தோறும் தனிமனிதனின் காலில் விழுந்து எழுகிறார்கள். நம்முடைய கலாச்சாரம் காலாச்சாரம்' ஆகிவிட்டது. சிந்தனையாளர்கள் புலம்புகின்றனர். இந்தச் சூழ்நிலையில் நம்முடைய பண்பாட்டில் இந்த வழக்கம் எவ்வாறு தோன்றி காலந்தோறும் வளர்ந்து வந்துள்ளது எனப் பார்ப்பது அவசியம். எனச் அரசுகளும் நகர நாகரிகமும் வளர்ச்சி அடையாத காலக்கட்டத்தில். அதாவது இனக்குழுப் பண்பாடே பொதுப் பண்பாடாக நிலவிய ஒரு சமூக அமைப்பில் இவ்வழக்கம் தோன்றியதாகவோ சமூக மதிப்பைப் பெற்றிருந்ததாகவோ தெரியவில்லை. பின்னர், சிறிய அளவில் அரசுகள் தோன்றி அரசர்கள் தமக்குள் போரிட்டுக் கொள்கின்றனர். வென்றவனின் காவில் தோற்றவன் விழுந்து தன்னுடைய தோல்வியை ஏற்றுக் 11