பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாம் உரையாட வேண்டுமா? உண்மைக்காகவும், திருப்திக் காகவும், இன்பத்திற்காகவும் ஒரு முறையாவது விவாதிக் கக் கூடாதா? எந்த ஒரு விஷயத்திலும் உயிர்நாடியை ஆழ்ந்து சென்று காணும் இயல்பும், பிறரைப் புரிந்தி கொள்ளும் இயல்பும், ஏனய உயர்ந்த அறிவுத் திறங்களும் அவரிடம் நிறைந்துள்ளன . உண்மையின் வடிவத்தை அறியும் இயல்பு - அதற்கேற்ற மனத்திடம் என்பவையும் உள்ளன. ஆளுல், இவை அனைத்தும், அவருடைய நுண்ணறிவும் புதியன புனேயும் திறமும் என்னேப் பொறுத்த வரைப் பயனற்றவையே. ஆண்டு முழுவதிலும், அவ ருடைய அக மனத்துடன் உறவு கொள்ள விரும்பி, எத்துணே முறை முயன்றும் பயன்படவில்லை. எப்பொழு தும், உங்களிடம் போராடுவதற்காக, ஏதேனும் வினுேத மான விதண்டாவாதம் பிடித்து விடுவார். உங்கள் கால மும் மனமும் விளுகி விடும். இணைபிரியா நண்பர்களாக இருந்து, நட்பின் உயர்வை மிக மிகப் பாராட்டிய இவர் கள் இருவருக்கும் பிடிப்பு விட்டுப் போனது வருந்தத் தக்கதே. இருவருமே நட்டை மிக உயர்ந்ததாக வைத்துப் போற்றினர்; இப்பொழுது அவர்களுடைய நோக்கங்கள் நிறைவேற, இருவருமே ஏமாற்றத்தை விலையாகத் தர வேண்டி இருந்தது. 1856 இல், ஹென்றியை, நியூயார்க்கின் அருகில் உள்ள பெர்த் ஆம்பாய் என்ற இடத்திற்கு ஆல்காட் அழைத்துச் சென்ருர், அந்த இடத்தில் புதிதாக சமுதாயக் கூட்டு ஒன்றை நிறுவும் முயற்சியைத் தொடங்கக் கருதி, அதற் குரிய அளவீடு செய்வதற்காகவே, ஆல்காட் தோரோவை அழைத்துச் சென்ருர். அவர்கள் ஒரு மாத காலம் அங்குத் தங்கி இருந்தனர். அந்தப் புதிய சமுதாய அமைப்பைவிட, அங்குள்ள இயற்கை அமைப்பில் அதிக ஈடுபாடு கொண்டார் தோரோ. ஒரு நாள் ந்யூயார்க்கில் பிறரால் அதிகம் புகழப் பெற்ற வால்ட் விட்மன் என்ற கவிஞரைத் தேடி இகுவரும் சென்றனர். அவருடைய "புல்லின் இலகள் என்ற கவி தைத் தொகுதி வெளியானவுடன், பழமையில் விருப்பங் கொண்டவர் டாலர், அக்கவிதைகள் வெளிப்ப ை1ாகச் சில விஷயங்களே எடுத்துக் கூறியமைக்காக, அதனே எதிர்த்துக் கூச்சலிட்டனர். தோரோவும் பழமை பாராட்டுக் பன் பினராகலின், புல்லின் இலேகள் என்ற கவிதைகளே ப் 119