பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்55

 சுந்தரமூர்த்திக்குப் பிடித்த விஷயங்களில் இப்படிப் பொழுது போக்குவதும் ஒன்று ஆகும்.

அவ்விதம் திருநகர் செல்வதற்கு சிரமமோ தடங்கலோ எதுவும் இராது என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால் அவர் எதிர்பாராத தடங்கல் ஒன்று வந்து சேர்ந்தது.

தனியராக வாழ்ந்த சுந்தரமூர்த்தியின் சாப்பாட்டுத் தேவைகளை கவனித்துப் பூர்த்தி செய்யவும் வீட்டு அலுவல்களைச் செய்து முடிக்கவும் பெரிய அம்மா ஒருத்தி வீட்டோடு இருந்தாள். பார்வதி ஆச்சி என்ற அந்த அம்மாளின் மகள் தனது எட்டு வயது மகனுடன் முந்தியதினம் வந்து சேர்ந்தாள். ஆச்சியும் மகளும் இன்னொரு ஊரிலிருந்த உறவினர் வீட்டுக்கு, அங்கே நிகழ்ந்திருந்த இழவு விசாரிப்பதற்காகப் புறப்பட்டார்கள். துக்க வீட்டுக்கு சின்னப் பையனையும் கூட்டிப் போக அவர்கள் விரும்பவில்லை. போகவர அதிகப்படியான செலவு வீண் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருந்தது. அதனால் பையனை வீட்டோடு விட்டுச் செல்லத் தீர்மானித்தார்கள். காலை வேளைக்கும் ராத்திரிக்கும் போதுமான அளவு இட்டிலி, மத்தியானத்துக்குச் சாப்பாடு எல்லாம் தயாரித்து வைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.

"பையன் இங்கேயே இருப்பான். உங்களுக்கு தொந்தரவு எதுவும் தரமாட்டான். வெளியே போய் விளையாடிவிட்டு, பசிக்கிற நேரத்துக்கு வந்து சாப்பாடு கேட்டான், காலை இட்டிலி நாங்களே கொடுத்துவிட்டுப் போயிடுவோம். மத்தியானம் சாப்பாடு கொடுங்க, ராத்திரி நாங்க வருவதுக்கு முன்னெப் பின்னே ஆகும். ராத்திரியும் அவனுக்கு இட்டிலி கொடுங்க. அவனை வேறே எங்கேயும் விட்டுட்டுப் போக முடியலே. கூட்டிக்கிட்டுப் போகவும் வசதிப்படலே. தயவு செய்து அவனை கொஞ்சம்