பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64வல்லிக்கண்ணன்

 தது போக, இரண்டு காய்களும் சிறுமியின் முன் கிடந்தன.

இருளம்மையைப் பார்த்து மகிழ்ந்த கண்கள் பறிக்கப் பட்ட பழங்களையும் கண்டன. மகிழ்ச்சியுடன் அல்ல. 'ஏய், இந்தப் பழங்களை யாரு பறிச்சுது?’' என்று உறுமினார் முதலாளி.

"புள்ளே அழுதுது. நான்தான் பறிச்சுக் குடுத்தேன்' என்று பணிவுடன் தெரிவித்தாள் அவள்.

“ஒவ்!' என்று குரைத்தார் அவர். 'உன் மடியிலே என்னது? கனமாத் தெரியுதே? அவரது கழுகுப் பார்வை கண்டுவிட்டதற்குக் கேள்விகள் விளக்கம் தேடின.

"ஒண்னுமில்லே சாமி” என்று இழுத்தாள் அவள்.

"என்ன முழுங்குறே? அதுவும கொய்யாப் பழங்கள் தானா? 'பெரிய ஐயா'வின் தொணியில் அதிகாரச் சூடு ஏறிக்கொண்டிருந்தது. உண்மையைச் சொல்றியா; அல்லது ஆளை விட்டு......”

இருளம்மையின் முகம் வாடிக் கருகியது. அவள் கைகள் நாலைந்து எலுமிச்சம் பழங்களை வெளியே எடுத்து வைத்தன.

திருட்டுக் கழுதை! என்ன இருந்தாலும், எவ்வளவுதாள் கொடுத்தாலும் உங்க திருட்டுப் புத்தி போகவே போகாது. திருட்டுக் கை நீளாமல் நிற்கவும் செய்யாது. கீதாசாரியனின் பேரன் போல் பேசினார் முதலாளி மகன் முதலாளி.

இதுக்காக பத்துநாள் சம்பளத்தைப் புடிச்சு விடுவேன். ஒகோ. இவ்வளவுக்கு ஆயிட்டதா? உங்க வீட்டுத் தோட்டம் மாதிரி இஷ்டம் போலே எல்லாவற்