பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 ☆ வல்விக்கண்ணன்


அவள் இருக்கிற இடத்திலே சிரிப்பும் துணை இருக்கும். ஹுய்-ஊய்ய் என்ற கூச்சலும் கீச்சொலியும் விஜயம் செய்து போகும். குஷியும் கும்மாளியும் வளையமிட்டுக் கொண்டே இருக்கும். அமைதி என்பதை அறிந்து கொள்ளாத அழகி ஆவள். மெளனம் என்பதைக் கலையாகவோ, பண்பாகவோ போற்ற விரும்பாத குமரி அவள்.

அவளுடைய தோழி தங்கம் "சாதுக் குழந்தை." "அடித்தால் கூட அழத் தெரியாத பாப்பா, இல்லை இல்லை; அழ விரும்பாத பேதை" என்று ராஜம்மா கிண்டலாகக் குறிப்பிடுவது உண்டு. சிநேகிதிகளை சாதாரணமாகவே கெண்டை பண்ணி மகிழும் சுபாவம் உடைய ராஜம்மா குத்திக் குத்தி கேலி செய்வதற்கு விஷயம் கிடைக்கிற போது சும்மா இருந்து விடுவாளா?

"தங்கம் உன்னுடைய... உம், வந்து. உம். உன்னுடைய... என்னவென்று சொல்ல?. ஆமா ஆமா... காதலர் எப்படிப்பட்டவர் என்று நான் சொல்லட்டுமா?" "ஆவாரா" ஸ்டைலில் டிரஸ் செய்து கொண்டு, திலீப் குமார் மாதிரி கிராப் வளர்த்துக் கொண்டு, ஜிப்பி பாணியில் வேலைத்தனங்கள் செய்து...

"சீ போ!" என்று சீறிப் பாய்ந்தாள் தங்கம்.

'தெரியும் தங்கம்!' என்று இழுத்தாள் தோழி. ஒரு நபரைக் காணாத போதெல்லாம் எங்கள் தங்கத்தின் மையுண்ட கண்கள் காற்றில் அலைபட்ட கருமேகங்கள் போல அங்கும் இங்கும் உருண்டு புரண்டது எங்களுக்குத் தெரியாதா? பஸ் ஸ்டாப்பிலே தவம் செய்ததும், கடலோரத்திலே காத்து நின்றதும், ரோட்டிலே ஏங்கி நடந்ததும் நாங்கள் அறிய மாட்டோமா? அந்த நபர் வரக் கண்டதும் எங்கள் தங்கத்தின் முகம் செந்தாமரையாக மாறியதும், அவள் கண்கள் படபடத்ததும், இதழ்க்