பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78வல்லிக்கண்ணன்


வகைகள் எழுப்புகிற ரகம் ரகமான ஒலிகள் எவ்வளவு என்று ராமலிங்கம் எண்ணினான்.

அந் நேரத்தில் கூட மெய்சிலிர்க்க வைக்கும்படியான கோர ஒலி ஒன்று காற்றில் மிதந்து வந்தது. மரங்களின் இலைப் பாதுகாப்பினுள் பதுங்கியிருந்த பறவைகள் பயந்து கதறின. குரங்குகள் கூச்சலிட்டன. இருட்டின் ஆழத்திலிருந்து பல் ரகம்மான அலறல்கள் சிதறி வெடித்துப் பரவுவது போல் ஒலிக் குழப்பம் காற்றில் மிதந்து வந்தது.

காற்றும் வலுப்பெற்றுக் கொண்டிருந்தது.

வெளவால்கள் சிறகடித்து 'விஷ் விஷ்' என ஒசையிட்டவாறு மலைநம்பி கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன.

குளிரும் கொசுக்கடியும் அவனைப் பாதித்தன. நேரம் நகர்ந்தபோதிலும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை.

மலையின் வேறொரு பகுதியில், காற்றினால் மோதி உராய்ந்துகொண்டிருந்த மூங்கில் மரங்களில் நெருப்பு பற்றிக் கொண்டிருக்க வேண்டும். காற்று அதை மேலும் விசிறி, பெருந்தீயாக வளர்த்துக் கொண்டிருக்கும். அதனால் எழுந்த ஜுவாலை உயர்ந்த மரங்களின் மீது வெளிச்சம் பூசியது. அதை ராமலிங்கம் உணர முடிந்தது. அவன் அடிக்கடி மலைத்தீ பற்றிக் கேள்விப் பட்டதுண்டு.

'இதனால்தான் பறவைகளும் மிருகங்களும் வெறி பிடித்தவை போல் கத்துகின்றன போலும்!’ என்று அவன் எண்ணினான்.

ராமலிங்கம் கண்களை மூடியவாறு உட்கார்ந்திருந்தான். அவன் கைகள் கதவுக் கம்பிகளை அழுத்தமாகப்