பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தோழி நல்ல தோழிதான்89

வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மையையும், மனித நாடகங்களையும், மனித நாடகங்களையும் வேடிக்கையாகக் கண்டு ரசிக்கக் கற்றுக் கொண்டவனின் நையாண்டிச் சிரிப்பா? அளவிட்டுச் சொல்ல முடியாதுதான்.

திருவாளர் நமசிவாயம் பிறப்பில்தான் கொடுத்து வைக்காதவர் ஆகிவிட்டார் என்றால், வளர்ப்பு நிலையிலும் அவர் பிரமாத வாய்ப்புகளைப் பெற்றுவிட வாழ்க்கை உதவவில்லை.

அவர் பிறந்த சில மாதங்களிலேயே அவருடைய தாய் மண்டையைப் போட்டுவிட்டாள். அவள் விதி அப்படி. அதற்கு நமசிவாயம் என்ன செய்ய முடியும்? ஆனால், உறவினரும் ஊராரும் குழந்தையைத்தான் பழித்தார்கள். ‘ஆக்கங்கெட்டது! பிறந்ததுமே பெத்தவளைத் தூக்கித் தின்னுட்டு நிக்குது’ என்றார்கள்.

அவர் தந்தை சுமாரான வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருந்தார். அவருடைய கஷ்டகாலமும், அவர் செய்த செலவுகளும், வாங்கிய கடன்களும் சேர்ந்து, அவருக்கு இருந்த சொத்துகளை இழக்கச் செய்தன. அதற்கும் பையனின் துரதிர்ஷ்டம்தான் காரணம் என்று பலரும் பேசினார்கள்.

இந்த விதமாக, பல சந்தர்ப்பங்களிலும், பலரும் சொல்லிச் சொல்லி, நமசிவாயத்துக்கே அவருடைய ‘அதிர்ஷ்டம் கெட்ட தனத்தில்’ ஒரு நம்பிக்கை படிந்து விட்டது. அவர் வாழ்வில் அவ்வப்போது குறுக்கிட்ட நிகழ்ச்சிகளும் அவருடைய எண்ணத்துக்கு வலு வேற்றின.

‘பணம் கட்டிப் பரீட்சை’ என்றும், ‘சர்க்கார் பரீட்சை’ என்றும் முன்னோர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டு வந்த எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சையில் நிச்சயம்