பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86வல்லிக்கண்ணன்


பார்த்து, எங்கெங்கோ திரிந்து, எப்படியோ ஒரு தினுசாக நசளோட்டி வந்தார். அவருடைய ஊர்ப் பெரியவர் ஒருவர், நமசிவாயம் பேரில் அனுதாபம் கொண்டோ, அல்லது பெண்ணைப் பெற்று வளர்த்து அவள் பெரியவளாகி நின்றதும் அவளை எவன் கையிலாவது பிடித்துக் கொடுத்துவிட்டுத் தங்கள் பொறுப்பைக் கழிக்கப் பெரிதும் முயன்றும் வெற்றி பெறாது தவித்த பெற்றோர் தந்த கமிஷன் தொகையைப் பெற்றுக் கொண்டதாலா, ல ட் சு மி என்கிற கன்னிகையை நமசிவாயத்துக்கு வாழ்க்கைத் துணைவியாக்கி உதவி புரிந்தார்.

இல்லற வாழ்வின் இனிமைகளைப் பூரணமாக அனுபவிக்கவும் நமசிவாயத்துக்குக் கொடுத்து வைக்கவில்லை. லட்சுமி கொடிய நோயினால் பீடிக்கப்பட்பட்டிருத்தாள். அந்த எலும்புருக்கி நோய்க்கே அவள் சீக்கிரம் பலியாகிப் போனாள்.

அதன் பிறகு நமசிவாயம் கல்யாணத்தை நாடவில்லை. குடும். வாழ்வுக்கு ஆசைப்படவுமில்லை. சமூக சேவை, பொதுநலப் பணி, கடும் உழைப்பு என்று பல வழிகளிலும் தன் கவனத்தையும் காலத்தையும் செலவிடலானார். அதில் அவருக்குப் பணம் கிடைக்கவில்லை. ஓரளவு பெயர் கிடைத்தது. அவருக்கு நிறைய அன்பர்களும் வியப்பர்களும் வந்து சேர்ந்தார்கள்.

"நமசிவாயம் அவர்களின் அன்பு உள்ளத்தை, ஆற்றலை, உழைப்பை, தன்னலமற்ற சேவையை, பொதுவாக அவரது பெருமையையும் மதிப்பையும் நம்மவர்கள் நன்றாக உணரவில்லை. ஊம். அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை! பாவம் அவர் மட்டும் அமெரிக்காவில் அல்லது ஐரோப்பிய நாடு எதிலாவது பிறந்திருந்தால் மிகவும் ஏற்றம் பெற்றிருப்பார்; மிகுந்த கெளரவ நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பார்" பார் என்று அவர்கள் சொல்வது வழக்கம்.