பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்87


பிறப்பு, வாழ்வு இவற்றில் அவருக்கு சீரும் சிறப்பும் கொடுக்காத காலம் மரணத்திலாவது:அரிகாரம் செய்ததா? அதுவும் இல்லை.

முக்கியமான சமூகத் திருப்பணி ஒன்றின் காரணமாக திருவாளர் நமசிவாயம் தமது மாவட்டத்தை விடுத்து, பட்டணம் போகத் திட்டமிட்டார். இன்று போகலாம் நாளை போகலாம் என்று காலத்தை ஏலத்தில் விட்டு நாளோட்டிய பிறகு ஒருநாள் துணிந்து ரயிலேறினார்.

அங்கும் காலம் சதி செய்து விட்டது. நேற்றே கிளம்பியிருக்கணும். போக முடியல்லே. நாளைக்கு என்று இன்னும் ஒத்திப்போடுவது சரியல்ல, இன்றே போய்விட வேண்டியதுதான் என்று சொல்லி யாத்திரை கிளம்பினார் நமசிவாயம். அவர் தமாஸ் செய்து களித்த 'ஜாதக விசேஷம்' இப்பொழுது விஷ்டித்தனமாக விளையாடியது.

ஒருநாள் முன்னாலோ, ஒருநாள் தாமதித்தோ நேராது, இன்றைய தினம் பார்த்து கோர விபத்து ரயில் பாலத்தில் விளையாடி ரயில் செண்டிகளைக் கவிழ்த்து, பலரைச் சாகடித்தது. செத்தவர்களில் நமசிவாயமும் ஒருவர்.

அவர் உடல் நசுங்கிச் சிதைந்து, ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிப் போயிருந்தது.

"பாவம், நல்ல மனிதருக்கு நல்ல சாவு கொடுத்து வைக்கலியே" என்று அவரை அறிந்த அனைவரும் அனுதாபப்பட்டார்கள்.

திருவாளர் நமசிவாயம் வளர்ந்து, வாழ்த்து பணிபல புரிந்துவந்த நகரில் அவருக்காக அவர் நினைவை கெளரவிப்பதற்காக- அவருடைய நண்பர்கள் இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அநேக பிரசங்கிகள் பங்கு கொள்வதாக இருந்தது. அதற்கான விளம்பரங்கள் முன்னேற்பாடுகள் எல்லாம் ஆர்வத் தோடு செய்யப்பட்டன.