பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழி நல்ல தோழிதான்7

கடையிலே குறுநகை பூத்ததும் நாங்கள் அறியாத விஷயங்களா? அந்த துஷ்யந்த மகாபுருடரும் எங்கள் சகுந்தலை அம்மாளும் கண்களை புறாக்கள் ஆக்கிக் காதல் தூது விட்டு மகிழ்ந்து போவதைத்தான் நாங்கள் தெரிந்து கொள்ளவில்லையா?.......

“ஐயோ ராஜம், சும்மா இரேன்!” என்று தங்கம் கெஞ்சினாள்.

“சும்மா இருந்தால் ஆகாதடி தங்கம். காதல் வளர வேண்டுமானால் தோழியின் தயவு தேவை. நீதான் இலக்கிய ரசிகை ஆயிற்றே; உனக்குத் தெரியாத விஷயமா இது?” என்று ராஜம்மா சொன்னாள்.

இப்படிப் பேசிப்பேசி அவள் தங்கத்தின் உள்ளத்தில் வளர்ந்த ரகசியத்தை உணர்ந்து விட்டாள். “தங்கத்துக்கு துணிச்சல் கிடையாது. அச்சம், மடம், நாணம் வகையறா அளவுக்கு அதிகம் இருக்கிறது!” என்பது தோழியின் அபிப்பிராயம். ஆகவே, தன் சினேகிதிக்குத் துணைபுரிய வேண்டியது தனது கடமை என்று ராஜம்மா தானாகவே முடிவு செய்து, செயல்திட்டத்திலும் ஈடுபட்டு விட்டாள். புதுமைப் பெண் அவள். பயம், தயக்கம் போன்றவை அவள் பக்கம் தலைகாட்டத் துணிவதில்லை.

ராஜம்மாளின் உதவியினால் தங்கமும், அவள் பார்வைக்கு இனியனாக விளங்கியவனும் பேச்சு பரிமாறிக் கொள்ளும் நிலைபெற முடிந்தது.

ஒரு சமயம் ‘பஸ் ஸ்டாப்’பில் தங்கமும் ராஜாம்மாளும் நின்ற வேளையில், அவனும் சிறிது தள்ளி நின்று கொண்டிருந்தான். ராஜம் தன் சிநேகிதியோடு சிரித்துப் பேசி மகிழ்ந்ததை அவனும் ரசித்தான். அப்போழுது வேகமாக ஒரு டாக்ஸி வந்தது. ரஸ்தாவில் மழைநீர் தேங்கிக் கிடந்தது. டாக்ஸியின் வேகம் தண்ணீரில்