பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94வல்லிக்கண்ணன்


கவுரவிப்பவராக வரவேண்டும் என்று அவளுக்கு எழுதிக் கேட்கிறேன். பெரிய ஒட்டல் ஒன்றைக் குறிப்பிட்டு தேதி, நேரம் எல்லாம் தெரிவித்து எழுதலாம். அவள் வருவாள். அப்போ பிடித்துக் கொள்ள லாம்” என்று கவிஞர் திட்டம் தீட்டினார்.

மற்றவர்களும் 'நல்ல ஐடியா!' எனப் பாராட்டினார்கள்.

அவ்விதமே கவிஞர் சிநேகவல்லிக்கு எழுதினார். அவளும் இசைவு தெரிவித்துக் கடிதம் எழுதினாள். குறிப்பிட்ட நாளில் கனவுப் பிரியன், மண்ணின் மைந்தன், மர்மக்கதை மன்னன், துணை ஆசிரியர் சாந்தப்பன், நால்வரும் பிரபல ஒட்டலில் காத்திருந்தார்கள் ஆவலோடு. காலம்தான் ஓடியது. சிநேகவல்லி வரவேயில்லை,

எல்லோருக்கும் ஏமாற்றம்தான்.

நாவலாசிரியர் கனவுப் பிரியன் அவளைக் காணலாம் என எதிர்பார்த்துக் காத்திருந்ததையும், அடைந்த ரமத்த்தையும் விவரித்து அவளுக்குக் கடிதம் எழுதத் தவறவில்லை.

மண்ணின் மைந்தன் உண்மையை அறிந்தே தீர்வது என்ற முடிவுடன் சிரமங்களை பாராட்டாது, சிநேகவல்வியின் ஊருக்கே போய் விட்டார்.

அவரது திடீர் வருகை அவளுக்கு திகைப்பு அளித்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, சந்தோஷம் காட்டி வரவேற்றாள்.

அவள் தோற்றம் கவிஞரை திடுக்கிட வைத்தது. நிஜ சிநேகவல்லி அவர்களுடைய கற்பனையை பொய்யாக்கும் விதத்தில் இருந்தாள். அவர்கள் அனைவரும் குளு குளு இளம் பெண் ஒருத்தியைத்தான் நினைத்திருந்தார்கள்.