பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ரோட்ஸ் நிறுவிய பிரிட்டிஷ் தென் ஆப்பிரிக்கக் கம்பெனியின் ஆட்சிக்குள் வடகிழக்கு ரொட்டீசியா விலும் வடமேற்கு ரொடீசியாவிலும் 1891இல் தனித் தனி நிர்வாகங்கள் ஏற்பட்டன. 1899இல் இந்த நிர்வாகங்கள் பிரிட்டிஷ் அரசின் கண்காணிக்கைக்கு உட்பட்டன. 1911இல் வடரொடீசியா என்ற பெயரில் ஆட்சி ஏற்பட்டது. வடகிழக்கு, வடமேற்கு ஆட்சிகள் இணைக்கப்பெற்றன. 1924இல் பிரிட்டிஷ் அரசினர் ஒரு கவர்னரை நிய மித்தனர். சட்டமன்றமும் ஆட்சிக் குழுவும் நியமிக் கப்பட்டன. இப்பகுதியைத் தென் ரொடீசியாவுடன் இணைக்க வேண்டுமென்ற திட்டத்தை ஜாம்பியா மக்கள் எதிர்த்த வண்ணமாக இருந்தனர். வடரொடீசியாவும் நியாசாலந்தும் பிரிட்டிஷ் பாதுகாப்பு நாடுகளாகவும் தென் ரொடீசியா, உள் ளாட்சி உரிமை படைத்த பிரிட்டிஷ் குடியாட்சியாக வும் இருந்து வந்தன. இந்த மூன்று அமைப்புக்களை யும் ஒன்று சேர்த்து 1953இல் ரொடீசியா நியாசாலந்து கூட்டாட்சி தோற்றுவிக்கப்பெற்றது. கூட்டாட்சி வடக்கிலிருந்து தெற்கே ஓராயிரம் மைலுக்குப் பரவியிருந்தது. ஒருகோடி மக்களைத் தன் னகத்தே கொண்டிருந்தது. மூன்று பகுதிகளிலும் ஒன்றுக்கொன்று ஆதரவாகப் பொருளா தாரக் கட்டுக் கோப்புக்களையும் போக்குவரத்து வசதிகளையும் பெருக் கிக் கொள்வது இந்தக் கூட்டாட்சியின் குறிக்கோளாக இருந்தது. 1959இல் கென்னத்கெளண்டா தலைமையில் ஜாம்பியா காங்கிரசு என்ற விடுதலை இயக்கம் ஆப்பி