பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டின் புதிய நகரை உருவாக்கத் தென் ஆப் பிரிக்க அரசு இரண்டு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறது, ஏன் இந்தத் தொகையை ஏற்றுக் கொண்டீர்கள் என்று பண்டாவைக் கேட்டால் அவர் கேட்கும் எதிர்க் கேள்வி நாய் விற்ற காசு குமா? என்பதாகும். குலைக் லிலோன்விக்குத் தலைநகரை மாற்றிய பிறகு பழைய தலை நகரான சோம்பாவை ஒரு பல்கலைக் கழக நகரமாக ஆக்கி விடுவதென்று பண்டா முடிவு செய்திருக்கிறார். மலாவிப் பல்கலைக் கழகம் 1965ல் நிறுவப் பெற்றிருக் கிறது. தேசிய மயமும் நாட்டின் தேவையும் தொழில்களைத் தேசியமயமாக்குவதை டாக்டர் பண்டா சிறிதும் விரும்பவில்லை. சர்க்கரை உற்பத்தி, மலாவியின் தேவையைவிடக் கூடுதலாகியிருக்கிறது. தேயிலை உற்பத்தி 17,500 டன் அளவாகப் பெருகி விட்டது. மணிலாக்கடலை உற்பத்தியும் கூடியவண்ண மாக உளது. ஏனைய ஆப்பிரிக்க நாடுகளான கானா, உகண்டா ஆகியவற்றில் உற்பத்திப் பெருக்கமோ, தொழில் வளர்ச்சியோ இந்த அளவு இல்லை. தென் ஆப்பிரிக்கா இராணுவ வல்லமையுள்ள நாடு கல்லுடன் மோதிக்கொள்வது அறிவுடைமை யாகாது. இரகசியமாக வாணிகம் நடத்துவதைவிட பலரறியத் தென் ஆப்பிரிக்காவுக்குப் பொருள்களை விற்பதையும், வாங்குவதையுமே அவர் விரும்புகிறார், அரசியல், மேடைப்பேச்சுக்கு ஏற்றது. வணிக உறவு, வயிறு வளர்க்கத் தேவையானது' என்பது பண்டாவின் முடிந்த முடிபு.