பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


ஏன் இப்படிப் பொய் சொல்லிக்கொண்டேயிருக்கிறாய்? இது ஒரு தொழிலா? இப்பொழுது உண்மையாகச் சொல்லு. கனவானுடைய துணிகளை எங்கே வைத்திருக்கிறாய்? “அவைகளை விற்று உணவுப் பண்டங்கள், மது முதலியவை வாங்கிவிட்டேன். என்னிடம் வரும் துணிகளையெல்லாம் இப்படித்தான் விற்றுத் தீர்த்துவிட்டேன். இதில் ஒன்றும் புதுமையில்லை! என் வழக்கமே இதுதான்!”

"மககளுடைய பொருள்களை வஞசனையாகக கவர்வதை

ஆண்டவன் அனுமதிப்பானா? ஒரு நாள் அவனுக்கு நாம் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்!”

"நான் ஏழை. ஏழையால் வேறு என்ன செய்ய முடியும் ? கை நிறையப் பொருள் இருந்தால், சாமான்கள் எல்லாம் வாங்கி, வைத்துக் கடையை விருத்தி செய்ய முடியும். மேலும், நாளுக்கு நாள் தொழில் மந்தமாகிவிட்டது. நானே கடையைப் பூட்ட வேண்டிய நேரத்தில், நல்ல வேளையாக அதிகாரிகளே வந்து பூட்டிவிட்டார்கள் !’

அப்படியானால் வேறு என்ன செய்ய யோசிக்கிறாய்?

"எவ்வளவோ நேர்மையாக உழைத்தும், என் நிலைமையும் வர வர மோசமாகிவிட்டது. ஏழைமைதான் எனக்கும் காரணம். தொழிலில் நகரில் எனக்கு நிகரான திறமையுள்ளவர் கிடையாது. நான் எவ்வளவோ சிரத்தையுடன் உழைத்து வருகிறேன். ஆயினும், இப்பொழுது என் கடைக்கு அதிகமான ஆட்கள் வருவதில்லை. நானும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன் !
அபு கிர். தன் நண்பன் தன் வழிக்கு நெருங்கி வந்துவிட்டான் என்பதை உணர்ந்து, அதற்குத் தக்கபடி பேசத் தொடங்கினான். இருவரும் கப்பலேறி வேறு நகரத்திற்குச் சென்று தொழில் செய்யலாம் என்று அவன் ஆலோசனை கூறினான். நம் இருவர் தொழில்களும் எங்கும் செல்லக்கூடியவை, எல் லோருக்கும் தேவையானவை. இங்கே வறுமையில் உழல்வதை விட, நாம் வெளி நாடு செல்லுவதே எல்லா வகையிலும் நன்மையாகும்!’ என்று அவன் சொன்னான்.